சென்னை மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்பு நிவாரணமாக மீனம் பாக்கம் அகர்சந்த் மான் மல் ஜெயின் கல்லூரி சார்பில் மீனம்பாக்கம் சுற்று வட்டார பகுதி மக்க ளுக்கு உதவும் விதமாக கல்லூரியின் உணவு வங்கி மூலம் 1000 பேருக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன.
கல்லூரி செயலர் உதன்குமார் சோர்டியா, இணை செயலர் ஹேமந்த் சோர்டியா ஆகியோர் இத்திட்ட செயல்பாட் டிற்கு முக்கிய பங்காற்றினர். இத்திட்டத்தின் ஒருங்கிணைந்த முயற்சியாக உணவுப் பொருட்கள், வீட்டுப் பொருட்கள், உடைகள், போர்வைகள் உள்ளிட்ட வாழ்வாதார தேவைகளுக்கான பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டது.
மேலும் கடந்த 10ம் தேதி கல்லூரி சார்பில் மருத்துவ உதவி மற்றும் கண் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது.
பேரிடர் காலத்தில் பாதிக்கப்பட்ட உள்ளூர் மக்களுக்கு சமூக நலனுக்கான பங்களிப்பை தருதல், சமூகத்தை மேம்படுத்துதல், சமூக சேவை செய்தல் ஆகிய வற்றை நோக்கமாக கொண்டு அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி இந்த நிவாரண உதவி பணி களை செய்துள்ளதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.



