fbpx
Homeபிற செய்திகள்முதல்வர் மு.க.ஸ்டாலின் 18ம் தேதி வருகிறார்: முன்னேற்பாடுகளை அமைச்சர் முத்துச்சாமி ஆய்வு

முதல்வர் மு.க.ஸ்டாலின் 18ம் தேதி வருகிறார்: முன்னேற்பாடுகளை அமைச்சர் முத்துச்சாமி ஆய்வு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகின்ற 18ம் தேதி கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை புரிய உள்ளார்.
18ம் தேதி கோவைக்கு வரும் முதலமைச்சர் நவ இந்தியா பகுதியில் உள்ள எஸ்.என்.ஆர். கலையரங்கில் நடை பெறும் மக்களுடன் முதல்வன் திட்ட துவக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ள நிலையில் நிகழ்ச்சி நடைபெறும் கலையரங்கை தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்துறை அமைச்சர் முத்துச்சாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார், மாநகராட்சி ஆணை யாளர் சிவகுரு பிர பாகரன், மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ் ணன் உட்பட பல்வேறு உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

இந்நிகழ்வில் செய்தியா ளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் முத்துசாமி 18ம் தேதி மக்களுடன் முதல்வன் என்ற திட்டம் துவங்கப்பட உள்ளதாக வும், இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாவட்டத் திலும் 10 இடங்களில் 17 நாட்கள் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்படும்.

கோவையில் நடைபெறும் நிகழ்வில் பொது மக்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளும் உணவு ஏற்பாடுகளும் செய்யப்படும். அதனை தொடர்ந்து செம்மொழி பூங்கா அடிக்கல் நாட்டு விழா நிகழ்வில் முதல்வர் கலந்து கொள்கிறார். அதே இடத்துல் சுமார் 10,000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது என்றார்.

செம்மொழி பூங்காவை கட்டமைக்கும் போது மக்களின் எண்ணம் தேவைகள் எப்படி இருக் கும் என தெரிந்துவிடும் என தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img