fbpx
Homeபிற செய்திகள்பேராசிரியர் வெங்கடாசலபதிக்கு கவிஞர் பாரதி விருது

பேராசிரியர் வெங்கடாசலபதிக்கு கவிஞர் பாரதி விருது

ஈரோட்டில் மக்கள் சிந்தனை பேரவை சார்பில் நடைபெற்ற கவிஞர் பாரதி பிறந்தநாள் விழாவில், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர் அ.இரா.வெங்கடாசலபதிக்கு கேடயம், தகுதிச் சான்றிதழ் மற்றும் ரூ.50,000 அடங்கிய பாரதி விருதை பேராசிரியர் சிற்பி பாலசுப்ரமணியம் வழங்கினார்.
பேரவை தலைவர் வழக்கறிஞர் டி.ஸ்டாலின் குணசேகரன் வரவேற்றார். அக்னி ஸ்டீல்ஸ் இயக்குநர் கே.தங்கவேலு தலைமை வகித்தார்.

கவிஞர் புதுமைப்பித்தன் உருவப்படத்தை பேராசிரியர் டி.ராஜாராம் திறந்து வைத்தார். பேரவை மாநில துணைத் தலைவர் கோ.விஜயராமலிங்கம் தகுதிச் சான்றிதழ் வாசித்தார். மாநில செயலாளர் என்.அன்பரசு நன்றி கூறினார்.

முன்னதாக, பாரதி தனது கடைசி உரையை ஆற்றிய கருங்கல்பாளையம் நூலகத் திலிருந்து நந்தா ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 100 பேர் பேரணியாக புறப்பட்டு விழா மேடையை அடைந்தனர்.

வட அமெரிக்க தமிழ் சங்க பேரவை தலைவர் கொளந்தைவேல் ராமசாமி பாரதி ஜோதி ஏற்றி பேரணியை துவக்கி வைத்தார்.

சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொள்ள தேர்வான வேளாளர் கல்லூரி மாணவி கவிதாசினி பாரதி ஜோதியை ஏந்தி மேடையில் விருது பெற்றவருக்கு வழங்கினார்.

படிக்க வேண்டும்

spot_img