கோவை சகோதயா பள்ளிகளுக்கிடையே நவம்பர் 22-ம் தேதி முதல் 25 ம் தேதி வரை தடகளப்போட்டிகள் நடை பெற்றது.
இதில் வேளாளர் வித்யாலயா பள்ளியின் சார்பாக 12,14,17,19 வயது பிரிவுகளில் மாணவர்கள் கலந்து கொண்டு முதல் பரிசு 14 மாணவர்களும், இரண்டாம் பரிசு 5 மாண வர்களும், மூன்றாம் பரிசு 8 மாணவர்களும் வென்று சாதனை படைத்துள்ளனர்.
தரவரிசைப் பட்டியலில் இப்பள்ளி மூன்றாம் இடத்தையும், வயது 19 வயதின் கீழ் நடைபெற்ற போட்டியில் மாணவிகள் முதலிடத்தைப் பெற்றுச் சாதனை படைத்தனர்.
இப்பரிசுகளை வென்ற மாணவர்களை பள்ளியின் தலைவர்
சி.ஜெயக் குமார், தாளாளர், எஸ்.டி .சந்திரசேகர், வேளாளர் அறக்கட்டளை ஆலோசகர் சி.பாலசுப்ரமணியம், எம்.யுவராஜா , முதன்மை முதல்வர் ஆர்.நல்லப்பன், முதல்வர் வி. பிரியதர்ஷினி, துணை முதல்வர் ஆர்.மஞ்சுளா, மக்கள் தொடர்பு அலுவலர் எம். கார்த்திகேயன் பாராட்டினர்.



