சேலத்தில் முதல் முறையாக வாசன் கண் மருத்துவ மனையில் அதி நவீன வசதிகளுடன் கூடிய புத்தம் புதிய லேசிக் மெஷின் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதன் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக சேலம் மாநகராட்சியின் மேயர் இராமச்சந்திரன், டாக்டர் எழில் வேந்தன், மற்றும் உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.
வாசன் கண் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் டாக்டர் கமல் பாபு, சேலம் தலைமை மருத்துவர் டாக்டர் செல்வகுமாரி தலைமையில் இவ்விழா சிறப்பாக நடத்தப்பட்டது.
மேலும் வாசன் கண் மருத்துவமனையில் மண்டல செயல் இயக்குனர் சுந்தர முருகேசன், பானு பிரதாப் சிங், மண்டல மேலாளர் வெங்கடேஷ், மூத்த பொது மேலாளர் பன்னீர்செல்வம், கோவை மண்டல வணிக மேலாளர் தமிழ்செல்வன் மற்றும் மருத்துவமனையின் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை மண்டல மேலாளர் செல்வம் சிறப்பாக செய்திருந்தார்.



