fbpx
Homeபிற செய்திகள்மழை வெள்ளத்தில் கோவை மேம்பாலங்கள்

மழை வெள்ளத்தில் கோவை மேம்பாலங்கள்

கோவையில் நேற்று இரவு பெய்த கனமழையால் மேம்பாலங்கள், சாலைகள் மழை வெள்ளத்தில் மூழ்கின. சென்னையில் புயல், வெள்ளத்தின் பாதிப்பு ஓய்ந்து நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனிடையே கோவை, திருப்பூர், நீலகிரி உட்பட 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த சூழலில், கோவையில் நேற்று இரவு கனமழை பெய்தது. மாநகர பகுதிகளிலும், புற நகரின் வெவ்வேறு பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியது.
இந்த கனமழை காரணமாக கோவையின் சாலை களை மழை வெள்ளம் சூழ்ந்தது.

அவினாசி சாலை மேம்பாலத்தின் கீழ் பகுதி முழுவதுமாக மழை நீர் சூழ்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோல் லங்கா கார்னர் பாலமும், கிக்கானி ரவுண்டானாவும், சிங்காநல்லூர் சாலைகளும் வெள்ளத்தில் மூழ்கின.

அவினாசி சாலை மேம்பாலத்தில் தேங்கியுள்ள மழை நீர் ராட்சத மோட்டார் கொண்டு வெளியேற் றப்பட்டது. மேலும், மழை வெள்ளம் பாதித்த பகுதி களை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

படிக்க வேண்டும்

spot_img