fbpx
Homeபிற செய்திகள்ரேஷன்கடைகளில் கருவிழியை பயன்படுத்தி பொருட்கள் வழங்க ஏற்பாடுகள் தீவிரம்

ரேஷன்கடைகளில் கருவிழியை பயன்படுத்தி பொருட்கள் வழங்க ஏற்பாடுகள் தீவிரம்

கோவை மாவட்டத்தில் மொத்தம் 1404 ரேஷன் கடைகள் உள்ளன. இங்கு 11.50 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் உள் ளனர். இவர்களுக்கு ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு செய்யப்பட்டு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கருவிழியை பயன்படுத்தி பொருட்கள் வழங்குவதற்கான தற் போது ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

இது குறித்து கோவை மாவட்ட வழங்கல் அலு வலர் குணசேகரன் கூறிய தாவது:
கோவை மாவட்டத் திற்கு 75 கருவிழி ஸ்கேன் செய்யும் எந்திரம் முதற்கட்டமாக வந்துள்ளது.

அந்த எந்திரத்தில் கைரேகை பதிவு செய்யும் கருவி, ரசீது பெரும் வசதி மற்றும் கருவிழி ஸ்கேன் செய்யும் கருவி ஆகியவை இணைக்கப்பட்டு பொது மக்களுக்கு பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது கோவை மாநகர பகுதிகளில் உள்ள 75 ரேஷன் கடைகளுக்கு இந்த கருவி வழங்கப்பட்டு சோதனை நடத்தப்பட உள்ளது.

அதன் பின்னர் படிப்ப டியாக மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளுக்கும் இந்த நவீன கருவி வழங்கப்பட உள்ளது.

தற்போது வரை ரேஷன் கடையில் உள்ள கருவிகளுக்கு 3ஜி இணைப்பு வழங்கப்பட் டிருந்தது தற்போது அது மாற்றியமைக்கப்பட்டு 4ஜி இணைப்பாக வழங் கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இடர்பாடுகள் இல்லாமல் பொதுமக்கள் ரேஷன் பொருட்களை வாங்கி செல்ல முடியும் வெளி மாவட்டத்தில் இருந்து வந்து கோவையில் குடி« யறிய 90 ஆயிரம் பேர் ரேஷன் பொருட்களை வாங்கி வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறி னார்.

படிக்க வேண்டும்

spot_img