சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை பெய்து இதில் பாதிக்கப்பட்ட பொதுமக் களுக்கு கோவை மாநகர கமிஷனர் அலுவலகம் சார்பில் மாநகர போலீ சார் உதவியுடன் அரிசி, பருப்பு, தண்ணீர் பாட்டில்கள், பண் பிரட் பிஸ்கட் பேண்ட் சட்டை ஸ்வட்டர் பெண்களுக்கான ஆடைகள் சோப் டூத் பேஸ்ட் மற்றும் நாப்கின் உட்பட அத்தியாவசியமான பொருட் கள் சேகரிக்கப்பட்டு லாரி மூலம் அனுப்பப் பட்டது.
இதனைத் தொடர்ந்து பொருட்கள் அனைத்தும் லாரிகளில் ஏற்றப்பட்டு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிவாரண பொருட்கள் அனைத்தையும் கோவை மாநகர கமிஷனர் பாலகிருஷ்ணன் அறிவுரைப்படி மிக்ஜாம் புயல் வெள்ளத் தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு கோவை மாநகர காவல் துறை சார்பாக ரூ 2 லட்சம் மதிப்புள்ள உடை பொருட்களும் ஒரு லட்சம் மதிப்புள்ள உணவுப் பொருட்களும் ரூ 79 ஆயிரம் மதிப்புள்ள தண்ணீர் பாட்டில்களும் 61 ஆயிரம் மதிப்புள்ள அத்தியாவசிய பொருட்களும் மொத்தமாக ரூ 5 லட்சத்து 74 ஆயிரம் மதிப்புள்ள வெள்ள நிவாரண பொருட்கள் தயார் செய்யப்பட்டு இன்று சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
லாரி மூலம் அனுப்பப்படுகின்ற பொருட்களை கோவை மாநகர கமிஷனர் பாலகி ருஷ்ணன் கொடி அசைத்து அனுப்பி வைத்தார்.



