கடந்த 2022 – 2023 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் தங்களது பாடத்தில் 100% தேர்ச்சி பெற்று தந்த பாட ஆசிரியர்களுக்கான விருது வழங்கும் விழா நத்தக்காடையூரில் உள்ள காங்கேயம் குரூப் ஆப் இன்ஜினியரிங் பில்டர்ஸ் இன்ஜினியரிங் கல்லூரியில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துதாஸ் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் சின்னச்சாமி அம்மாள் பள்ளி ஆசிரியர்கள் சரவணகுமார், குணமேகலா, வடிவு, மகேஸ்வரி, ஷீனா ஜாஸ்மின், மல்லிகா, விஜயகுமார், உடற்கல்வி ஆசிரியர் பாலகிருஷ்ணன் ஆகியோர் விருதுகளை பெற்று சின்னச்சாமி பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.
விருது பெற்ற ஆசிரியர்கள் அனைவரையும் தலைமை ஆசிரியர் சுகதேவ், உதவி தலைமை ஆசிரியர்கள் ரவிச்சந்திரன். செலின் ராணி சாந்தா மணி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் பாராட்டினர்.



