fbpx
Homeபிற செய்திகள்உடல் உறுப்பு தானம் விழிப்புணர்வு மாரத்தான்- ஐ.ஜி. துவக்கி வைத்தார்

உடல் உறுப்பு தானம் விழிப்புணர்வு மாரத்தான்- ஐ.ஜி. துவக்கி வைத்தார்

கோவையில் நடைபெற்ற உடல் உறுப்பு தானம் அவசியம் என்பதை வலியுறுத்தும் விதமாக நடைபெற்ற விழிப்புணர்வு மரத்தான் போட்டியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஓடினர்.

உலக அளவில் உடல் உறுப்பு தானம் என்பது மிக அவசியமான ஒன்றாக உள்ளது. இந்த உடல் உறுப்பு தானம் அவசியம் என்பதை வலியுறுத்தும் விதமாக கோவை கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது. இதனை கோவை மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பவானிஸ்வரி கொடியசைத்து துவக்கி வைத்தார். சூலூர் பகுதியில் தொடங்கி அவினாசி சாலை வரை செல்லும் 16 கிலோ மீட்டர் மாரத்தான் போட்டியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ஓடினர்.

இதனை தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய, மேற்கு மண்டல ஐஜி பவானிஸ்வரி, உடல் உறுப்பு தானம் என்பது மிக அவசியமான ஒன்று உடல் உறுப்பு தானத்தை பொதுமக்கள் தானமாக கொடுக்க முன்வர வேண்டும். இது போன்ற மராத்தான் நடைபெறுவது ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் என தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img