கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கோவை, நீலகிரி, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் திமுக இளைஞரணி செயல்வீரர் கள் கூட்டத்தில் கலந்து கொள்ள சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த கழக இளைஞரணி செயலாள ரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கோவை விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் உதகை புறப்பட்டார்.
மேட்டுப்பாளையம் நகரை அவர் கடந்து செல்லும் போது பேருந்து நிலையம் எதிரே குவிந்திருந்த திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கரகாட் டம், ஒயிலாட்டம், கட்சி நிறத்தில் பலூன்கள் பறக்கவிட்டும், மலர்களை தூவியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
உதயநிதி காரின் மேற்பகுதி வழியே வெளியில் வந்து தொண்டர் களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டதுடன் அவர்கள் கொடுத்த பலூன்களையும் பெற்று பறக்கவிட்டார்.
இதன் பின்னர் அவரது வாகனம் ஊட்டி நோக்கி சென்றது.
இந்த வரவேற்பு நிகழ்ச்சியின் போது தலைமை செயற்குழு உறுப் பினர்கள் அஷ்ரப் அலி, டி.ஆர்.சண்முகசுந்தரம், மேட்டுப்பாளையம் நகர மன்ற தலைவர் மெஹரிபா பர்வீன், கூடலூர் நகர மன்ற தலைவர் அறிவரசு, துணைத்தலைவர் அருள் வடிவு, மேற்கு ஒன்றிய செயலாளர் சுரேந்திரன், கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.எம்.டி.கல்யாண சுந்தரம், வடக்கு நகர செயலாளர் முகமதுயூனுஸ், தெற்கு ஒன்றிய செயலாளர் முனுசாமி, இளைஞர் மாவட்ட செயலாளர் ஹக்கீம், ரமேஷ், ரஹூம், காரமடை நகர மன்ற தலைவர் உஷா, காரமடை நகர செயலாளர் வெங்க டேஷ், சிறுமுகை நகர செயலாளர் உதயகுமார், ரியாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



