தமிழ்நாடு வேளாண் மைப் பல்கலைக்கழகத்தில் இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகத்தின் முழு உதவியோடு, வேளாண்மை அறிவியல் நிலையம் பொங்கலூரில் செயல்பட்டு வருகிறது.
இது தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 14வது வேளாண்மை அறிவியல் நிலையமாகும். இதன் செயல்பாடுகள் குறித்தும், தென்னையில் உள்ள பூச்சி மற்றும் நோய்கள் நிவர்த்திக்கான ஆராய்ச்சி களின் முடிவுகளை அறியும் பொருட்டு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைசச்ர் மு.பொ.சாமிநாதன் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் கலந்து கொண்டார். அமைச்சருக்கு வேளாண் மை அறிவியல் நிலையத் தின் குறிக்கோள், நோக்கம், செயல்பாடுகள் மற்றும் வழங்கப்படும் பயிற்சிகள், இடுபொருட்கள் குறித்து குமார் (திட்ட ஒருங்கிணைப்பாளர்) எடுத்துரைத்தார்.
தளியில் உள்ள தென்னை வளர்ச்சி வாரி யத்தில் உள்ள திட்டங்கள் குறித்து விரிவாக ரகோத் தமன் தென்னை வளர்ச்சி வாரியத்தில் உள்ள திட் டங்கள் குறித்து விரிவாக எடுத்துக்கூறினார்.
மாவட்ட கலெக்டர் பேசுகையில் வேளாண்மை அறிவியல் நிலையம் இம் மாவட்டத்திற்கு எவ்வளவு முக்கியத்தும் வாய்ந்தது என்பதனையும் அதனை உழவர்கள் பயன்படுத்தி மேன் மையடையும் வழியினையும் எடுத்துக் கூறினார்.
பின்பு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசுகை யில், வேளாண்மை அறிவியல் நிலையத்தை இம்மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், பண் ணை மகளிர் மற்றும் கிராமப்புற இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், தென்னையை முக்கிய பயிராக சாகுபடி செய்யும் உழவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் வே ளாண்மை அறிவியல் நிலைய பேராசிரியர்கள், வேளாண்மை துணை இயக் குநர், இணை இயக்குநர் மற்றும் உதவி இயக்குநர்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட உழவர்கள் பங்குபெற்றனர்.
இந்நிகழ்ச்சியில் தென்னையை தாக்கும் பூச்சி, நோய் மேலாண்மை, தேனி வளர்ப்பு மற்றும் கால்நடை நோய் மேலாண்மை குறித்த கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டது.
அமைச்சரின் அறிவுறுத்தலின்படி நேற்று தென்னையைத் தாக்கும் பூச்சி, நோய் மேலாண்மை குறித்த பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.



