fbpx
Homeபிற செய்திகள்பகுதி நேர பணியாளர் வேலைவாய்ப்பு ஆண்டுதோறும் 5 சதவிகிதம் அதிகரிப்பு

பகுதி நேர பணியாளர் வேலைவாய்ப்பு ஆண்டுதோறும் 5 சதவிகிதம் அதிகரிப்பு

இந்திய பணியாளர் கூட்டமைப்பு வேலைவாய்ப்புகளில் பகுதிநேர பணியாளர் வேலைவாய்ப்புகளின் சமூக தாக்கம் குறித்த ஆண்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கை அத்தியாவசிய வேலைவாய்ப்பு, மக்கள்தொகை, பன்முகத்தன்மை, புதிய வேலைவாய்ப்பு விருப்பங்கள், புதிய பணியாளர்கள், பெண்கள், குறைந்த திறன் கொண்ட தொழிலாளர்களுக்கான வாய்ப்புகளை தெளிவாக எடுத்துரைத்துள்ளது.

பகுதிநேர பணியாளர் துறை ஆண்டுக்கு ஆண்டு 5 சதவிகிதம் வளர்ச்சியடைந்து வருகிறது. 80 சதவிகிதத்துக்கும் அதிகமான பகுதிநேர தொழிலாளர்கள் தங்கள் வேலை மற்றும் பணிநேரம் திருப்தி அளிப்பதாகவும், 63 சதவிகிதம் தொழிலாளர்கள் இத்துறையில் தொடர்ந்து பணிபுரிய விரும்புவதாகவும், 19 சதவிகித தொழிலாளர்கள் நிரந்தர வேலைவாய்ப்புகளுக்கான திறன்களை இத்துறையில் பெறுவதாகவும், இத்துறையில் கிடைத்த திறன்களின் அடிப்படையில் தங்களுக்குரிய வேலைவாய்ப்புகள் கிடைத்ததாக 38 சதவிகிதம் பேரும், ஒப்பந்த காலத்திற்கு பிறகும் பணி நீட்டிப்பு கிடைக்கபெறுவதாக 8 சதவிகிதம் பேரும், 17 சதவிகிதம் முதன்முறை பணியாளர்கள் வேலைவாய்ப்பு கிடைக்கப் பெற்றதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

தரவுகளை வெளியிடும் நிகழ்வில் இந்திய பணியாளர் கூட்டமைப்பு தலைவர் லோஹித் பாட்டியா பேசுகையில், ‘முதலாளிகள், ஊழியர்கள் இருவரும் நெகிழ்வான பணியாளர் தீர்வுகளை ஏற்றுக்கொள்வதும் பயன்படுத்துவதும், இன்றைய தொழிலாளர் சந்தையின் செயல் திறனை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது’ என்றார்.

இந்திய பணியாளர் சம்மேளனத்தின் நிர்வாக இயக்குனர் சுசிதா தத்தா கூறுகையில், ‘25-30 வயதுக்கு உட்பட் டவர்கள் 51 சதவிகிதம் என்ற அளவில் முன்னிலை வகிக்கும் ஒரு குறிப்பிடத்தக்க மக்கள்தொகை அமைப்பு பகுதிநேர வேலைவாய்ப்பின் துடிப்பான, உள்ளடக்கிய தன்மைக்கு சான்றாகும்‘ என்றார்.

மேலும் விவரங்களுக்கு லீttஜீs://ஷ்ஷ்ஷ்.வீஸீபீவீணீஸீstணீயீயீவீஸீரீயீமீபீமீக்ஷீணீtவீஷீஸீ.ஷீக்ஷீரீ என்ற இணையதளத்தை பார்வையிடலாம்.

படிக்க வேண்டும்

spot_img