fbpx
Homeபிற செய்திகள்தேனி மாவட்டத்தில் ஆண்களுக்கான குடும்பநல அறுவை சிகிச்சை முகாம்கள்

தேனி மாவட்டத்தில் ஆண்களுக்கான குடும்பநல அறுவை சிகிச்சை முகாம்கள்

ஆண்களுக்கான குடும்ப நல அறுவை சிகிச்சை விழிப்புணர்வு வாகன பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா தொடங்கி வைத்தார்.

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பில் ஆண்களுக்கான நிரந்தர குடும்ப நல அறுவை சிகிச்சைக்கான விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா கொடியசைத்து துவக்கி வைத்தார்

தேனி மாவட்ட குடும்ப நலத்துறையின் மூலம் ஆண்களுக்கான நிரந்தர குடும்ப நல அறுவை கருத்தடை சிறப்பு முகாம்கள் (நவீன வாசக்டமி) நடைபெற உள்ளது. நேற்று கடமலைக்குண்டு பகுதியிலும், இன்று (29ம் தேதி) தேனி மருத்துவக் கல்லூரியிலும், நாளை தேவதானபட்டியிலும், டிசம்பர் 1ம் தேதி தேவாரத்திலும், 2ம் தேதி வீரபாண்டியிலும், 4ம் தேதி கூடலூரிலும், 05ம் தேதி டொம்புச்சேரியிலும், 6ம் தேதி ராஜதானியிலும், 7ம் தேதி ஓடைப்பட்டியிலும், இந்த சிறப்பு முகாம்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடைபெற உள்ளது.

மேலும், வருகின்ற டிசம்பர் 4-ஆம் தேதி வரை அனைத்து வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், மருத்துவமனைகளிலும், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் இச்சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.

அறுவை சிகிச்சை மேற்கொள்பவர்களுக்கு தமிழக அரசு வழங்கும் 1,100 ரூபாயுடன் தேனி மாவட்ட ஆட்சியர் வழங்கும் ரூபாய் 3,900- உடன் மொத்தம் 5,000 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்பட உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் குடும்ப நல துறையின் துணை இயக்குநர் மரு.அன்புச்செழியன், இணை இயக்குநர் (பொ) மரு.சிவக்குமார், துணை இயக்குநர் (தொழுநோய்) மரு.ரூபன் ராஜ், துணை இயக்குநர் (காசநோய்) ராஜ பிரகாஷ், மற்றும் குடும்ப நலத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img