பங்குச் சந்தையில் முதலீடு செய்ய விரும்புவோருக்கும், நிலையான வருவாயை எதிர்பார்ப்போருக்கும் ஏற்ற முதலீட்டுத் திட்டமாக, ‘பஜாஜ் ஃபின்சர்வ் பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்ட்’) என்னும் புதிய திறந்தநிலை நிதித் திட்டத்தை பஜாஜ்
ஃபின்சர்வ் அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
பஜாஜ் ஃபின்சர்வ் அசெட் மேனேஜ் மென்ட் நிறுவனத்தின் ‘பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்ட்’ திட்டமானது ஒரு தனித்துவமான முதலீட்டு மாதிரி யைப் பயன்படுத்துகிறது, இது நடத்தை அறிவியல் மற்றும் நிதி நுண்ணறிவுகளின் அணுகுமுறையை ஒன் றிணைக்கிறது.
இந்தத் திட்டத்தின் மூலம் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் சந்தை ஏற்ற இறக்கத்திற்கேற்ப செயல்படவும், அவர்களின் வருவாயையும் மேம்படுத்திக் கொள்ளவும் முடியும்.
நிதி ஒதுக்கீட்டைத் தீர்மானிப்பதற்கு நிறுவனங்களின் சந்தை போக்குகளை மட்டும் அடையாளம் காணாமல் அதன் தரவுத் தொகுப்புக ளையும், நடத்தை அம்சங் களையும் இந்தத் திட்டம் பகுப்பாய்வு செய்கிறது, இதன் காரணமாக முத லீட்டாளர்கள் நீண்ட காலத்திற்கு சிறந்த வரு வாயைப் பெற முடியும்.
பேலன்ஸ்டு அட்வான் டேஜ் ஃபண்ட் திட்டம் குறித்து பஜாஜ் ஃபின்சர்வ் அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கணேஷ் மோகன் கூறுகையில், “இந்தப் புதிய திட்டம் எங்களின் அணுகுமுறைக்கு மற்றொரு உதாரணம் ஆகும்.
இங்கே, நடத்தை அறிவியல் மற்றும் நிதி நுண்ணறிவு ஆகிய இரண்டும் ‘சமநிலையில்’, நமது முதலீட்டு முடிவுகளை எடுக்க உதவுகின்றன. எங்கள் தனித்துவமான முதலீட்டுக் கொள்கை தகவல், அளவு மற்றும் நடத்தை ஆகியவற்றை ஒருங்கிணைந்து முத லீட்டாளர்களுக்கு அதிகப்படியான வருமா னத்தை ஈட்ட உதவுகிறது.
இது எங்களின் அனைத்து திட்டங்களுக்குமான அடிப்படையாக இருந்தாலும், எங்க ளின் பேலன்ஸ்டு அட்வான் டேஜ் ஃபண்டில் தான், முதலீட்டாளர்கள் உண் மையில் சிறந்த பலனைப் பார்க்க முடியும். வரும் காலங்களில் தொழில் துறையில் மேலும் பல நடத்தை அறிவியல் அடிப்படையிலான திட்டங்கள் அறிமுகம் செய்யப்படும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.
இது குறித்து இந்நி றுவனத்தின் தலைமை தகவல் அதிகாரி நிமேஷ் சந்தனும் திட்டம் குறித்து விளக்கி கூறினார். இந்த நிதித் திட்டம் சம பங்கைப் (Equity) பொறுத்தவரை நிமேஷ் சந்தன் மற்றும் திரு. சோர்ப் குப்தா மற்றும் கடன் பிரிவைப் பொறுத்தவரை சித்தார்த் சவுத்ரி ஆகி யோரால் கூட்டாக நிர்வகிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்திற்கான முதலீடு நேற்று ( 24-ஆம் தேதி) துவங்கி உள்ளது. டிசம்பர் 8-ஆம் தேதி நிறைவு பெறு கிறது.



