fbpx
Homeபிற செய்திகள்கோவையில் முத்தமிழ்த் தேருக்கு உற்சாக வரவேற்பு: - மலர் தூவி வரவேற்ற பள்ளி குழந்தைகள்

கோவையில் முத்தமிழ்த் தேருக்கு உற்சாக வரவேற்பு: – மலர் தூவி வரவேற்ற பள்ளி குழந்தைகள்

முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை யொட்டி, கோவை மாவட்டத்துக்கு வந்த முத்த மிழ்த்தேர் எனும் அலங்கார பேனா ஊர்திக்கு பள்ளி மாணவ மாணவிகள், அரசு அலுவலர்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக பன்முகத்தன் மையை இளம் தலைமுறை யினருக்கு எடுத்துச் செல்லும் வகையில், எழுத்தாளர் கலைஞர் குழுவின் மூலம் முத்தமிழ்த்தேர் எனும் அலங்கார ஊர்தி வலம் வருகிறது.

கடந்த நவம்பர் 4 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடங்கிய இந்த பயணம், அனைத்து மாவட்டத்துக்கும் சென்று, டிசம்பர் 4 ஆம் தேதி சென்னையில் நிறை வடைகிறது.

கருணாநிதி பயன்படுத்திய பேனா வடிவில் அமைக்கப்பட் டுள்ள இந்த ஊர்தி, இன்று காலை கோவை மாவட்டம் சூலூர் புதிய பேருந்து நிலையம் வந்தடைந்தது.
அலங்கரிக்கப்பட்ட முத்தமிழ் தேர் ஊர்திக்கு மேள தாளங்கள் முழங்க மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதி காரிகள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவி மாணவிகள் திரண்டு மலர் தூவி உற்சாக வர வேற்பு அளித்தனர்.

பேனா வடிவிலான ஊர்தியை பார்த்ததும் உற்சாகமடைந்த பள்ளி மாணவிகள் துள்ளி குதித்து மலர் தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதை யடுத்து ஊர்தியில் உள்ள கருணாநிதியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஆட்சியர் கிராந்தி குமார், பள்ளி மாணவ மாணவிகளுக்கு பேனா வழங்கியதுடன் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் எழுத்துக்களை படித்து அதில் உள்ள நெறிகளை வாழ்க்கையில் பின்பற்ற வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து முத் தமிழ் தேரை பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்து டன் பார்த்து சென்றனர். இதனையடுத்து அந்த தேர் கோவை கொடிசியா பகுதிக்கு வர உள்ளது.

படிக்க வேண்டும்

spot_img