உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு மேட்டுப்பாளையத்தில் விழிப்புணர்வு வாக்கத்தான் நிகழ்ச்சியை அபிராமி திரையரங்கு அருகே இருந்து நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா துவக்கி வைத்தார்.
இந்த விழிப்புணர்வு வாக்கத்தான் நிகழ்ச்சி இரண்டு கிலோமீட்டர் தூரம் நடைபெற்றது. இதில் பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு இரண்டு கிலோமீட்டர் நடந்து வந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா பேசிய தாவது: உலகெங்கிலும் 4.2 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட் டுள்ளனர். ஆண்டுதோறும் 1.5 மில்லியன் மக்கள் சர்க்கரை நோயால் உயிரிழந்து வருகின்றனர்.
நீரிழிவு நோயைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதே நோக்கமாக கொண்டு, சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பு மற்றும் உலக சுகாதார அமைப்பு இணைந்து நீரிழிவு நோய் தினத்தை உருவாக்கியது.
மேலும் வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தில் உடல் உழைப்பு குறைந்து போன காரணத்தினால் புதிய புதிய விஞ்ஞான கருவிகள் வந்து சேர்ந்த காரணத்தினால் உணவு பண்டங்களில் புதிய புதிய யுக்திகளை உலக அளவில் புகுத்தப்பட்ட காரணத்தினால் அந்தந்த மாநில வட்டாரங்களில் இருக்கின்ற தானி யங்களை சாப்பிடுகின்ற பழக்கங்கள் கைவிடப்பட்டதால் இன்றைக்கு பல்வேறு நோய்கள் நம்மை தொற்றிக் கொள்கிறது.
தற்போது உள்ள காலத்தில் அனைத்து பொருட்களும் அனைத்து கால சூழ்நிலைகளிலும் கிடைக்கிறது. பழங்களுக்கும் சீசன் கிடையாது. அதனால் நமது உணவு முறை மாறி உள்ளது. உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை மாற்றலின் காரண மாகவே நீரிழிவு நோய் அதிகமாக பரவி வருகிறது. இவ்வாறு ஆ.ராசா எம்.பி. பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் அஷ்ரப் அலி, டி.ஆர்.சண்முகசுந்தரம், பெள்ளேபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பிரஸ்குமார், மருத்துவர் விஜயகிரி பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள்,பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



