fbpx
Homeபிற செய்திகள்கூட்டுறவு வாரவிழாவில் கணினி மேம்படுத்தும் கருத்தரங்கம் இணைப்பதிவாளர் பார்த்திபன் தலைமையில் நடந்தது

கூட்டுறவு வாரவிழாவில் கணினி மேம்படுத்தும் கருத்தரங்கம் இணைப்பதிவாளர் பார்த்திபன் தலைமையில் நடந்தது

70வது கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு கூட்டுறவு அமைப்புகளை கணினிமயமாக்குதல் மற்றும் மேம்படுத்துதல் எனும் தலைப்பில் கோவை மாவட்ட கூட்டுறவு துறையால் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமையகத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது.

கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கோவை (மண்டலம்) எஸ்.பார்த்திபன் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு கடன் சங்கம், பணியாளர் கூட்டுறவு கடன் சங்கம், கூட்டுறவு கடன் சங்கம், துடியலூர் கூட்டுறவு சேவா ஸ்தாபனம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஆகிய நிறுவனங்களை சார்ந்த கணினி பிரிவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்சிக்கு மாவட்ட முன்னோடி வங்கி (கனரா வங்கி) டிஜிட்டல் விங்பிரிவை சேர்ந்த கணினி நிபுணர்கள் ஆர்த்ரேயா மற்றும் அஷோக் போஜன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கணினி பிரிவு மேலாளர் கணேஷ்ராம் குமார் ஆகியோர் சிறப்புரை வழங்கினார்கள். கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளர் ஜி.வி.விஜயபானு கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img