fbpx
Homeபிற செய்திகள்மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான சுழற்கோப்பை

மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான சுழற்கோப்பை

கோவை, மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, 2022-23ம் கல்வி ஆண்டில் சிறந்த பள்ளிக்கான தமிழக அரசின் சுழற்கோப்பையை வென்றுள்ளது.

சென்னையில் கடந்த 14ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர்களிடமிருந்து, கோவை, சர்க்கார் சாமக் குளம் ஒன்றிய வட்டாரக் கல்வி அலுவலர் ரமேஷ் பாபு, மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை மைதிலி, கணித பட்டதாரி ஆசிரியை சுகுணா ஆகியோர் இந்த சுழற்கோப்பையை பெற்றுக்கொண்டனர்.

இதுகுறித்து பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், இந்த வெற்றியை சாத்தியமாக்கிய, பள்ளியுடன் இணைந்து செயல்படும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் இந்த சுழற் கோப்பையை சமர்ப்பிக்கிறோம்.

கூடுதல் பொறுப்புகளுடனும், எதிர்பார்ப் புகளுடனும் முன்னேறி செல்கிறோம் என்றனர். சுழற்கோப்பையை பெற்றுக் கொண்ட ஆசிரியர் குழுவினர், கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்த குமாரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img