“மேஜிக் ஆப் ஹீலிங்” நிறுவனத்தின் “ஸ்பெல் ஃபார் பிகினர்ஸ்” எனும் புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
ஆன்மிக அமைப்பான “மேஜிக் ஆப் ஹீலிங்” சார்பில் நடைபெற்ற இவ் விழாவில் மின்வாரிய செயற்பொறியாளர் பாரி ராஜ், பீஜா டிரெய்னிங் பிரைவேட் லிமிடெட் நிறுவன இயக்குநர் பிர காஷ் சர்மா ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங் கேற்று இந்த புத்தகத்தை வெளியிட்டனர்.
“மேஜிக் ஆப் ஹீலிங்” அமைப்பில் ஆரோக் கியமான, மிகவும் சமநிலை யான உலகத்துக் கான பொதுவான பார்வையை பகிர்ந்து கொள்ளும் ஒரே எண்ணம் கொண்டவர்கள் இடம்பெற்றுள்ளனர். சமூகத்துக்கு சிறந்த சேவையை வழங்க வேண் டும் என்பதே இந்த அமைப் பின் முக்கிய நோக்கம்.
“ஸ்பெல் ஃபார் பிகினர்ஸ்” புத்தகத்தின் ஆசிரியர் பிங்கி பஞ்சாபி, விக்கா எனும் மத இயக்கத்தின் போதகராகவும், மந்திரங்கள் அறிந்தவராகவும், டாரோட் எனும் சீட்டுகள் மூலம் எதிர்காலத்தை கணிக்கும் தீர்க்கதரிசியாகவும் திகழ்கிறார்.
மேலும் தனிப்பட்ட வளர்ச்சியை மாற்றும் சக்தி பற்றிய ஆழ்ந்த புலமை கொண்டவராகவும் திகழ்கிறார். இவரது “ஸ்பெல் ஃபார் பிகினர்ஸ்” புத்தகத்தில் மாயாஜாலமும் தெளிவான படிப்படியான வழிமுறைகள், நாம் விரும்பியதை எளிதில் அடையக்கூடிய பொருட்க ளுடன் உள்ளது.
நேர்மறை ஆற்றலை ஈர்ப்பது, அன்பை வளர்ப்பது, கவனம் மற்றும் தெளிவை ஊக்குவிப்பது போன்றவற்றை இந்த புத்தகம் உள்ளடக்கியுள் ளது. மேலும் விவரங்களுக்கு சஞ்சய் பாபு – 9444244089, சென்னை ஈத்தோஸ் பப்ளிக் ரிலேசன்ஸ் 044-43562351 ஐ தொடர்பு கொள்ளலாம்.