fbpx
Homeபிற செய்திகள்கடலூர் மாவட்டத்தில் மழைநீர் அகற்றும் பணிகளை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

கடலூர் மாவட்டத்தில் மழைநீர் அகற்றும் பணிகளை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் அகற்றும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ.அருண் தம்புராஜ் முன்னிலையில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அன்சூல் மிஸ்ரா, பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கடலூர் மாவட்டத்தில் வட கிழக்கு பருவமழையின் காரணமாக மாநகராட்சிக்குட்பட்ட கார்த்திகேயன்நகர் பகுதியில் மழைநீர் அகற்றும் பணிகள் நடைபெறுவதையும், வில்வநகர் பகுதியில் உள்ள பெருமாள் குளத்தில் மழைநீர் வெளியேற்றும் பணிகளையும், அதனருகே மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வடிகால் மற்றும் வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறித்து அமைக்கப்பட்டிருந்த விளக்க புகைப்படங்களையும் பார்வையிட்டார்.

கடலூர் மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் எதிரே தென்பெண்ணை யாற்றின் நீர்வரத்தை பார்வையிட்டு, அதனருகே நெடுஞ்சாலை துறை மற்றும் நீர்வளத்துறை மூலம் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைக்கப்பட்டிருந்த விளக்க புகைப்படங்களையும் பார்வையிட்டார்.

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில பொதுமக்கள் பேரிடர் தொடர்பான புகார்களை 24 மணி நேரமும் தெரிவிக்கும் வகையில் இயங்கி வரும் கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து வருவாய்த்துறை,ஊரக வளர்ச்சித்துறை, நெடுஞ்சாலைத்துறை, மின்சாரத்துறை, பொதுப்பணித்துறை, தீயணைப்புத்துறை, காவல்துறை, நீர்வளத்துறை மற்றும் காதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவ லர்களிடம் வடகிழக்கு பருமழை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

மேலும் கனமழை எற்படும்போது அதனை பொதுமக்களுக்கு எவ்வித பதிப்புக்கள் இல்லாமல் எதிர்கொள்ளும் அளவிற்கு அனைத்து துறை அலுவலர்களும் தயார் நிலையில் இருக்க மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அறிவுறித்தினார்.

இந்த ஆய்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ம.இராஜசேகரன் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) /திட்ட இயக்குநர் ரா.சரண்யா மாநகராட்சி ஆணையாளர் மு.காந்திராஜ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img