fbpx
Homeபிற செய்திகள்‘சென்னை ஸ்லிம் அன்ட் பிட் 2.o’ வெளியீடு

‘சென்னை ஸ்லிம் அன்ட் பிட் 2.o’ வெளியீடு

உலக நீரிழிவு தினத்தை யொட்டி, எம்.வி. நீரிழிவு மற்றும் பேராசிரியர் எம்.விஸ்வநாதன் நீரிழிவு ஆராய்ச்சி மையம், “உடல்நல கருத்தரங்கம்: ஆரோக்கியமான மனதுக்கும் உடலுக்கும்“ என்ற நிகழ்வை நடத்தியது.

இந்நிகழ்வின் ஒரு பகுதியாக, புகழ்பெற்ற நிறுவனங்கள் “சென்னை ஸ்லிம் அன்ட் ஃபிட் 2.0” என்பதை அறிமுகப்ப டுத்தியது. சென்னையில் குழந் தைகள் மற்றும் இளம் பருவத்தினரிடையே அதிகரித்து வரும் உடல் பருமன் தொற்றுநோயை எதிர்த்து போராடுவதில் கவனம் செலுத்துகிறது.

சவேரா ஹோட்டலின் இணை நிர்வாக இயக்கு நர் நீனா ரெட்டி தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். எம்.வி. நீரிழிவு ஆராய்ச்சி மையம், சி.பி.எஸ்.இ. போர்டுடன் இணைந்து, சென்னையில் உள்ள அனைத்து மண் டலங்களிலும் விரிவான பள்ளி சுகாதார கை யேட்டை வழங்கியது.

எம்.வி. நீரிழிவு ஆராய்ச்சி மையம் தலைவர் மற்றும் நீரிழிவு நிபுணர் டாக்டர் விஜய் விஸ்வநாதன் கூறிய தாவது: மக்கள் இளமையாக இருக்கும்போது வாழ்க் கையை சுறுசுறுப்பாக வைத்திருக்க வேண்டும்.

குறைந்தது 45 நிமிடங் களாவது நீச்சல், ஜாக்கிங் அல்லது நடைப்பயிற்சி போன்ற உடற்பயிற்சிகளில் ஈடுபட வேண்டும். யோகா மற்றும் தியான பயிற்சி செய்வது மன அழுத்தத்தை குறைக்கும்.

நீரிழிவு ஆபத்தில் உள்ள மக்கள் அதற்கேற்ற உணவு சாப்பிட பழகுவது நல்லது. சரி விகித உணவு, முறையான உடற்பயிற்சி, 3 மாதங்களுக்கு ஒருமுறை ஆய்வக பரிசோதனை மற்றும் தகுதி வாய்ந்த மருத்துவரின் ஆலோசனைகள் மூலம் நீரிழிவு நோயை எந்த நிலையிலும் கட்டுப்படுத்தலாம் என் றார்.

படிக்க வேண்டும்

spot_img