உலகளவில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் அதிக ஆயுள்காலத்தை கொண்டிருப்பது தொடர்வதால் முதியவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. இதன் பின்விளைவாக வயதுவந்த முதியோர்கள் மத்தியில் நீரிழிவு பாதிப்பு வளர்ச்சியடைந்துவரும் கவலைக்குரிய அம்சமாக இப்போது மாறியிருக்கிறது.
மூத்த குடிமக்களுக்காக தனிச்சிறப்பாக வடிவமைக்கப்பட்ட, திறன்மிக்க நீரிழிவு மேலாண்மைக்கு நிலவும் அவசரத் தேவையை அதுல்யா சீனியர் கேர் நன்கு உணர்ந்திருக்கிறது.
அதுல்யா சீனியர் கேர் பொது மருத்துவர் எம். உமாபதி கூறிதாவது:
முதியோர்களின் திறன்களுக்கேற்ப வடிவமைக்கப்படும் உடற்பயிற்சிகள் உட்பட உடல்சார் செயல்பாடுகள், நீரிழிவு மேலாண்மையில் மிக முக்கியமானவை.
வயதுமுதிர்ந்த நபர்களுக்கு பொருத்தமான, அவர்களால் சிரமமின்றி செய்யக்கூடிய உடற்பயிற்சிகள் மற்றும் உடல்சார் நடவடிக்கைகளில் அவர்களை ஈடுபட வேண்டுமென அதுல்யா சீனியர் கேர் அறிவுறுத்துகிறது.
அதுல்யா சீனியர் கேரின் குடியிருப்பு வளாகம் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட தோட்டங்கள் மற்றும் திறந்தவெளி பகுதிகளை கொண்டிருப்பதால் குடியிருப்பாளர்களால் யோகா, ஏரோபிக்ஸ் மற்றும் உடற்பயிற்சிகளை செய்வதற்கு அது பயன்படுத்துகிறது.
தினசரி நடவடிக்கையில் நடைப்பயிற்சியை இன்றியமையா அம்சமாக இடம்பெற செய்வதும் மற்றும் படிப்படியாக அதன் வேகத்தையும், தீவிரத்தையும் அதிகமாக்குவதும், திறன்மிக்க நீரிழிவு மேலாண்மைக்கு உதவுகிறது.
குறைந்த தாக்கம் ஏற்படுத்தும் உடற்பயிற்சியாக நடைப்பயிற்சி இருப்பதால் ரத்தச்சர்க்கரை அளவுகளை கட்டுப்படுத்த அது உதவுகிறது.
முதியோரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி மகிழ்ச்சியுடனும், மனநிறைவுடனும் அவர்கள் வாழ்வதை உறுதிசெய்யும் குறிக்கோளில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் அதுல்யா சீனியர் கேர், முதியோருக்கான பராமரிப்பு சேவையை வழங்கும் தொழிற்பிரிவில் முதன்மை வகிக்கிறது என்றார்.



