fbpx
Homeபிற செய்திகள்குழந்தைகளுக்கு எதிரான கொடுமை கரூரில் விழிப்புணர்வு பேரணி

குழந்தைகளுக்கு எதிரான கொடுமை கரூரில் விழிப்புணர்வு பேரணி

கரூரில், குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகளை தடுத்தல் குறித்து விழிப் புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், சமூக பாதுகாப்புத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அழகு சார்பில் குழந்தைகளுக்கு எதிரான கொடுமையை தடுத்தல் குறித்த, குழந்தைகளுக்கான நடை பயணம் மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

பேரணியில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல், குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகள் குறித்து உறுதிமொழியை வாசிக்க, பங்கேற்ற அனைவரும் அதனை திரும்பக் கூறி உறுதிமொழி ஏற்றனர்.

பின்னர் கொடியசைத்து விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார்.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பிரியா, உதவி பாதுகாப்பு அலுவலர் மஞ்சு, குழந் தைகள் நல குழு தலைவர் மணிமொழி ராஜேந்திரன் மற்றும் உறுப்பினர்கள், செட்டிநாடு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மாணவ- மாண வியர், குழந்தைகள் இல்ல பணியாளர்கள், ஜெயம் டிரஸ்ட் கலைக்குழுவினர் ஆகியோர் பங்கேற்றனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து காளியப்பனுர், தாந்தோணி மலை வழியாக சென்று அப்பகுதியில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் பேரணி நிறை வடைந்தது.

பேரணையின்போது குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகளை தடுப் போம், குழந்தைகளை பாதுகாப்போம், குழந்தை களுக்கான வாழும் உரிமையை பாது காப்போம், குழந்தைகளின் பாதுகாப் புக்கு எதிரான தீங்கிழைத்தாலோ அல்லது வன்முறையோ நடைபெற்றாலோ, நடைபெறுவது போல் தெரிந்தாலோ உடனடியாக 1098 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் அளிப்போம் உள்ளிட்ட கோஷங்களை எழுப்பினர்.

கலைக் குழுவின் சார்பில் மேளதாளத்துடன், ஆடிப்பாடி விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

படிக்க வேண்டும்

spot_img