உலக நீரிழிவு நோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு கோவை ஆர்.எஸ். புரம் டிரினிட்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனையின் சார்பில் டாக்ஸி மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு இல வச கண் பரிசோதனை முகாம் இன்று (14ந்தேதி) துவங்கியது.
இந்த இலவச கண் பரிசோதனை முகாமை கோவை மாநகர போக்குவரத்து இணை ஆணையாளர் ராஜராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு துவக்கிவைத்தார்.
இது குறித்து டிரினிட்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் சுனில் ஸ்ரீதரன் கூறியதாவது :-
கோவை ஆர்.எஸ் .புரம் டி.பி.ரோட்டில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி டிரினிட்டி கண் மருத்துவமனையில் இன்று (14ம் தேதி) உலக நீரிழிவு நோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு மருத்துவமனை சார்பில் டாக்ஸி மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் துவக்கியுள்ளது.
இன்று முதல் வரும் 10 நாட்களுக்கு தினமும் 100 ஓட்டுனர்களுக்கு கண் பரி சோதனை செய்யப்படும். மேற்கண்டவாறு அவர் கூறினார்.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்த கோவை மாநகர போக்குவரத்து இணை ஆணையாளர் ராஜராஜன் பேசும் போது கூறியதாவது:-
இந்த கண் மருத்துவமனையில் வாகன ஓட்டுனர்களுக்கு இலவச கண் பரி சோதனை செய்யப்படும் என்று அறிவித்து சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. பார்வை குறைபாடு ஆரம்பநிலையிலேயே கண்டறியப்பட்டால் முற்றிலும் பார்வை இழப்பை தடுக்க முடியும்.
சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கண் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. நூறு பேருக்கு சர்க்கரை நோய் பரிசோதனை செய்தால் 40 பேருக்கு சர்க்கரை நோய் அறிகுறிகள் உள்ளது என கண்டறியப்படுகிறது.
எனவே வாகன ஓட்டுனர்கள் கண்பார்வை இழப்பை தடுக்க இதுபோன்ற கண் பரிசோதனை முகாமில் பங்கேற்று பயன்பெற வேண்டும். மேற்கண்டவாறு அவர் கூறினார்.
விழாவில் கோவை மாநகர போக்குவரத்து உதவி ஆணையாளர் அருள்முருகன், டிரினிட்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர் டாக்டர். முகமது ஷபாஸ், முதுநிலை ஆலோசகர் டாக்டர் மும்தாஜ், டாக்டர். அனுஷா, டாக்டர். விஜயகுமார், தலைமை நிர்வாக அதிகாரி ஜாஸ்மின், துணைத் தலைவர் (இயக்கம்) ஜான்சன் விஜய் மேத்யூ மற்றும் மார்கெட்டிங் இணை துணை தலைவர் ரவி குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.



