கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண் 83, வ.உ.சி பூங்கா சாலை, தமிழ்நாடு நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தில் ரூ.12.50 லட்சம் மதிப்பீட்டில் 250 மீட்டர் தொலைவிற்கு தார்சாலை அமைக்கும் பணியை நள்ளிரவில் மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் திடீர் ஆய்வு செய்தார்.
அப்போது தார் சாலை அமைக்க பயன்படுத்தப்படும் தாரின் வெப்பத்தை வெப்ப அளவிடும் கருவி கொண்டு ஆய்வு செய்தார். மேலும் சாலை அமைக்கப்படும் நீளம், அகலம் குறித்தும் கேட்டறிந்தார்.
புதியதாக அமைக்கப்படும் தார்சாலையின் தரத்தை தோண்டி பார்த்து ஆய்வு செய்தார் .
உடன், மாமன்ற உறுப்பினர் சுமா, செயற்பொறியாளர் கருப்புசாமி, உதவி செயற் பொறியாளர் பிரபாகரன், உதவி பொறியாளர் விமல் ராஜ், மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.



