இந்தியாவில்சோடியம் அயன் பேட்டரிகளை ஏ ஆர் 4 டெக் நிறுவனத் துடன் சோடியம் எனர்ஜி நிறுவனம் இணைந்து சோடியம் அயன் பேட் டரிகளை அறிமுகம் செய்கிறது
இதுகுறித்து சோடியன் எனர்ஜி நிறுவனத்தின் இணை நிறுவனரும் தலைமை செயல் அதி காரியுமான பாலா பச் சையப்பா, ஏஆர் 4 டெக் நிறுவனத்தின்இணை நிறுவனர் மகேஷ் பாண்டி ஆகியோர் கூறியதாவது:-
சோடியம் அயன் பேட்டரிகள் உற்பத்தியில் முன்னணி நிறுவனமாக திகழும் சோடியம் எனர்ஜி நிறுவனம் பாரம்பரிய பெட்ரோல் வாகனங்களை மின்சார வாகனங்களாக மாற்றுவதற்கான புதுமையான தொழில்நுட்பங்களை வழங்குவதில் முன்னோடி நிறுவனமாக திகழும் ஏ ஆர் 4 டெக் நிறுவனத்துடன் இணைந்துஇந்திய சந்தையில் சோடியம் அயன் பேட்டரிகளை விற்பனை செய்வதாக அறிவிக்கப்படுகிறது.
சோடியம் அயன் பேட்டரிகள் நீடித்து உழைப்பதோடு லீட் ஆசிட் பேட்டரிகளை விட விலை குறைவானது நீடித்து உழைக்க கூடிய தோடு சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்கும் இந்த தொழில் நுட்பம் நவீனமாக இருப்பதால் இந்திய சந்தையில் சிறப்பான இடத்தை பிடிக்கும்.
சிங்கப்பூரில் உள்ள சோடியம் எனர்ஜி நிறுவனத்தின் உள் வடிவமைப்பு குழுதொழில்நுட்பத்தை மேம்படுத்தி அதன் சொந்த கிராபெனின் மேம்படுத்தப்பட்ட சோடியம் அயன் பேட்டரி தொழில்நுட்பம் மற்றும் சோடியம் அயன் பேட்டரிகளுக்கான பயன்பாட்டிற்கான பிற செயல்பாடுகளில் அதிக கவனம் செலுத்துகிறது
மேலும் இதற்கான காப்புரிமை பெறும் நடவடிக்கையிலும் இந்த நிறுவனம் இறங்கியுள்ளது மேற்கண்டவாறு அவர்கள் கூறினார்கள்.



