கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வேதியியல் துறை சார்பில், “ரெடோலிஸ்டா-2023” என்ற தலைப்பில் சோப்பு திருவிழா, கல்லூரி வளாகத்தில் நேற்று (ஆக.7) நடைபெற்றது.
ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் தலைமை வகித்து, ரிப்பன் வெட்டி, சோப்பு திருவிழாவைத் தொடங்கி வைத்தார்.
வேதியியல் துறை பேராசிரியர்களின் வழிகாட்டுதலின் கீழ், 12 வகையான சோப்புகளை ஆய்வகத்தில் மாணவர்கள் தயார் செய்தனர். அவை பலவித வடிவங்களில் காண்பவர்களின் மனதைக் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டன.
எலுமிச்சை, மாங்காய், ஆரஞ்சு, துளசி, வேம்பு, ரோஜா, பன்னீர் ரோஜா, தேங்காய், சந்தனம் உள்ளிட்ட நறுமணம் வீசும் சோப்புகள் தயாரிக்கப்பட்டு, பார் வைக்கு வைக்கப்பட்டிருந்தன. இதில் தோல் வறட்சியைத் தடுத்தல், பொலிவு கொடுத்தல், கிருமிகளை அழித்தல், அழகை மேம்படுத்தும் தன்மை இந்த சோப்புகளில் நிறைந்துள்ளன.
இதை கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பார்வையிட்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை வேதியியல் துறைத் தலைவர் முனைவர் டி.சசிகலா மற்றும் பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் செய்திருந்தனர்.



