பெரியநாயக்கன் பாளையத்திற்கு அருகே கூடலூர் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் ரூ.2.65 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகளுக்கான அடிக்கல்நாட்டு விழா நடந்தது.
நகராட்சியில் 2022-23 ஆண்டின் நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 2.05 கோடி மதிப்பீட்டில் 15-வது வார்டுக்கு உள்பட்ட ரங்கா நகர்,16-வது வார்டுக்கு உள்பட்ட பாலாஜி நகர்,20-வது வார்டுக்கு உள்பட்ட சந்திரமணி நகர் மற்றும் மாணிக்க வாசக நகர்,ஆனந்த நகர் போன்ற பகுதிகளில் புதிய சாலைகளும், 2022-23-ம் ஆண்டின் 15ஆவது நிதிக்குழு மானியத்தின் கீழ் ரூ.57 லட்சம் மதிப்பீட்டில் பழையபுது£ர் மற்றும் பல பகுதிகளில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதற்கென நடந்த தொடக்க விழாவிற்கு நகராட்சித் தலைவர் அ.அறிவரசு தலைமை வகித்தார். நகராட்சி ஆணையாளர் பால்ராஜ்,துணைத் தலைவர் ரதி ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினர் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் ஆ.ராசா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பணிகளைத் தொடக்கி வைத்தார்.
தெற்குபாளையத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள முதலமைச்சரின் பள்ளிக் குழந்தைகளுக்கான காலை உணவுத் திட்டத்தின் கீழ் புதிதாகக் கட்டப்பட்டுள்ள சிற்றுண்டி தயாரிப்பு நிலையத்தையும் பார்வையிட்டார்.
பொறியாளர் கவிதா,நகராட்சிக் கவுன்சிலர்கள் ஜனார்த்தனன், பாலு,ப்ரியா,துரை செந்தில், பொன்மாடசாமி, காரமடை கிழக்கு திமுக ஒன்றிய செயலாளர் எஸ்.எம்.டி.கல்யாண சுந்தரம் மற்றும் பலர் உடனிருந்தனர்.



