fbpx
Homeபிற செய்திகள்பனாமா வணிக விரிவாக்கத்தில் 7 மில்லியன் டாலர் முதலீடு- புரோடாப்ட் நிறுவனம் தகவல்

பனாமா வணிக விரிவாக்கத்தில் 7 மில்லியன் டாலர் முதலீடு- புரோடாப்ட் நிறுவனம் தகவல்

இணைய துறையில் முன்னணி நிறுவனமான ப்ரோடாப்ட், 7 மில்லியன் டாலர் முதலீட்டின் மூலம் தனது பனாமா வர்த்தக நடவடிக்கைகளை விரிவு படுத்துகிறது. இந்த முதலீடு கிளவுட் கம்ப்யூட்டிங், செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்ப ஆதரவு போன்ற துறைகளில் சுமார் 500 தொழில்நுட்ப வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.

இந்தியாவைத் தலைமையிடமாகக் கொண்ட ப்ரோடாப்ட் நிறுவனம், இந்தியாவிலிருந்து முதன் முறையாக பனாமாவில் தொழில்நுட்ப சேவைகள் மற்றும் ஆலோசனை நிறுவன செயல்பாடுகளை துவங்குகிறது.

“இந்த மையத்தையும் அதன் பணியாளர்களையும் உருவாக்க நாங்கள் சுமார் 5 மில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளோம். நாட்டில் திறமையான பணியாளர்கள் மற்றும் சாதகமான வணிகச் சூழலை மேம்படுத்துவதன் மூலம், கடந்த இரண்டு ஆண்டுகளில் அதன் செயல்பாடுகளை பல மடங்கு அதிகரித் துள்ளோம்,” என்று ப்ரோடாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஹர்ஷ் குமார் கூறினார்.

பனாமாவில் ஆறு இருக்கைகளுடன் துவங்கப்பட்ட இந்நிறுவனம் தற்போது கடந்த இரண்டு ஆண்டுகளில் 200 தொழில்நுட்பம் மற்றும் துறை வல்லுனர்களுடன் விரிவடைந்துள்ளது. அமெரிக்காவின் மிகப்பெரிய தகவல் தொடர்பு சேவை நிறுவனங்களை தங்களுடைய முக்கிய வாடிக்கையாளர்களாக கொண்டுள்ளது.

‘ப்ரோடாப்ட் பல பெரிய நிறுவனங்களுடன் வேலை செய்கிறது. உலகம் முழுவதும் 30 நாடுகளில் 6000-க்கும் மேற்பட்ட தொழில்நுட்பம் மற்றும் துறை வல்லுநர்களைப் பயன்படுத்துகிறது. பனாமாவில் ப்ரோடாப்டின் வெற்றி மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

ஏனெனில் இது 2020 -ல் பனாமாவில் செயல்படும் முதல் இந்தியா சார்ந்த தொழில்நுட்ப சேவைகள் மற்றும் ஆலோசனை நிறுவனமாகும்’ என்று பனாமாவுக்கான இந்திய தூதர் உபேந்திர சிங் ராவத் தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img