fbpx
Homeபிற செய்திகள்பெருந்துறை கொங்கு ஐடிஐ மாணவருக்கு அமைச்சர்கள் பாராட்டு

பெருந்துறை கொங்கு ஐடிஐ மாணவருக்கு அமைச்சர்கள் பாராட்டு

பெருந்துறை கொங்கு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் கொங்கு ஐடிஐ செயல்பட்டு வருகிறது. இந்த ஐடிஐ-யில் பயி லும் இரண்டாமாண்டு மாணவர்.ஆ.கோகுல் சென்னையில் தமிழ்நாடு அரசு நடத்திய திறன் மேம்பாட்டு போட்டியில் கலந்து கொண்டார.

அவ ரது புதிய கண்டு பிடிப்பை, தமிழக இளைஞர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் க.பொன்முடி, சி.வி.கணே சன் மற்றும் திறன் மேம்பாட்டுக் கழகத்தின் இயக்குநர் இன்னசன்ட் திவ்யா ஆகியோர் பாராட்டினர்.

கோகுல் “ வீட்டு தொட்டியிலிருந்து தண்ணீர் செல்லும் குழாயிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் முறையை” தமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டு கழகம் நடத்திய போட்டியில் செயல்மு றையை சமர்ப்பித்தார்.

ஆய்வறிக்கைகள்

இப்போட்டியில் மாநிலம் முழுவதிலிருந்தும் 170 ஆய்வறிக்கைகள் சமர்ப்பிக் கப்பட்டது. அதில் கோகுல் உட்பட 13 மாணவர்கள் மாநில அளவில் தேர்ந் தெடுக்கப்பட்டனர்.இவரது சொந்த ஊர் பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம் ஆகும். தந்தை மூர்த்தி விசைத்தறி கூடத்தில் கூலி வேலை செய்து வருகிறார்.

சீனாபுரம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை பயின்றார். இவரின் ஆய்வறிக்கை நமது வீட்டு உபயோகப் படுத்தும் குடிநீர் குழா யிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் முறை ஆகும். குடிநீர் குழாயில் ஒரு டர்பைனை பொருத் துவதன் மூலம் மின்சாரம் பெறப்படுகிறது.

டர்பைன் சுழலும் போது அதன் மூலம்ஜெனரேட்டர் பயன்படுத்தி மின்சாரம் சேமித்து வைத்து அந்த மின்சாரத்தை வீட்டுக்கு உபயோகப்படுத்திக் கொள்ளலாம். மின் செலவு அதிகமாக வரும் காலக் கட்டங்களில் எளிமையான மின்சாரம் தயாரிக்கும் முறை.

பரிசு பெற்ற மாணவரை கொங்கு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் கொங்கு ஐடிஐ தாளாளர் வெங்கடாச்சலம் பாராட்டினார். இந்நிகழ் வில் கொங்கு ஐடிஐ முதல்வர் தினேஸ்குமார், கொங்கு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் முனைவர் .ஏ.வேதகிரி ஈஸ்வரன் மற்றும் ஐடிஐ ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img