fbpx
Homeபிற செய்திகள்கோவை குடியிருப்பு பகுதியில் புகுந்த எறும்பு தின்னி

கோவை குடியிருப்பு பகுதியில் புகுந்த எறும்பு தின்னி

வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை அமைப்பினர் மீட்டு வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

உலகில் உள்ள உயிரினங்களை மனிதர்கள் கண்டவுடன் அடித்து கொன்று விடுகின்றனர். இதனால் விலங்கள் சில அழிந்து விட்டன. சில அழிவின் பாதையிலே பயணித்து வருகின்றன.

அந்த வகையில் மண்ணுளியன் பாம்பு, நட்சத்திர ஆமைகள், எறும்பு தின்னி உயிரினங்கள் மனிதர்களால் பிடிபட்டு சந்தைபடுத்தப்படுகின்றன. இவைகள் அரிய வகை உயிரினங்கள் மற்றும் பாதுகாக்கப்படக் கூடிய உயிரினங்கள் பட்டியலில் முதன்மையான இடத்தில் இருக்கின்றன.

அவ்வாறான விலங்குகள் தென்பட்டால் உடனே வனத்துறையிடமும் தகவல் தெரிவிக்க அறிவுறுத்தி வருகின்றனர். இந்த நிலையிலே கோவையில் குடியிருப்பு பகுதியில் நுழைந்த எறும்பு தின்னி, மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள இடங்களில் சுற்றித் திரிந்ததால்.

அதனை பார்த்த பொதுமக்கள், வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை அமைப்பினரை அழைத்து எறும்பு தின்னி நடமாட்டம் குறித்து தெரி வித்தனர்.

உடனடியாக சென்ற அந்த அமைப்பினர் அந்த எறும்பு தின்னியை மீட்டனர். மீட்கப்பட்ட எறும்பு தின்னி வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அதனை பத்திரமாக வன பகுதியில் விடுவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img