தமிழ்நாடு யாதவ மகா சபையின் ஒருங்கி ணைந்த கடலூர் மாவட்ட நிர்வாகிகள், ஆலோசனை கூட்டம் நேற்று (ஞாயிற்று கிழமை) சிதம்பரத்தில் ஹோட்டல் ஜெயராமில் நடைபெற்றது.
இதில் திருச்சி மாநில மாநாட்டிற்கு பெருந் திரளாக கலந்து கொள்ள வேண்டும், என்பது உள் ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
தொடர்ந்து சிதம்பரம், அண்ணாமலை நகர நிர்வாகிகள் தேர்வு செய்து மத்திய மாவட்ட தலைவர் கே. கல்யாணசுந்தரம் அறிமுகம் செய்து வைத்தார்.
கிழக்கு மாவட்ட செயலாளர் மனோகரன், பொருளாளர் செந்தில் முருகன், மத்திய மாவட்ட தலைவர் கே.கல்யாண சுந்தரம், செயலாளர் கே.கே.செல்வராஜ், மேற்கு மாவட்ட தலைவர் அருள்நாதன், நிர்வாகி சதீஷ், மத்திய மாவட்ட துணை தலைவர் கோ.பாண்டுரங்கன், மங் கலம் பேட்டை ராதா கிருஷ்ணன், ரவிகிருஷ்ணன், கொள்கை பரப்பு செயலாளர் ஏ.கே. கோபால், பட்டாபி, கோவிந் தன், ராஜி, பழனிசாமி ஆசிரியர், சௌந்தர்ராஜன், ராமசாமி, மத்திய மாவட்ட இளைஞரணி செய லாளர் செல்வகுமார் ஆகியோர் கூட்டத்தில் பேசினர்.
முடிவில் மாநில துணைத்தலைவர் எஸ்.வி .ஜே.கோகுல கிருஷ்ணன் யாதவ் கூட்டத்தில் சிறப் புரையாற்றினார். முடி வில் ஜானகிராமன் நன்றி கூறினார்.



