கடலூர் கேப்பர் மலையில் உள்ள தமிழ்நாடு அரசின் காசநோய் மருத்து வமனையில் கையேடு வெளியீட்டு விழா நடை பெற்றது.
கடலூர் குழந்தைகள் நல மருத்துவ சங்கம் மூலம் டாக்டர் வி.சிவப்பிரகாசம் குழுவினர் எழுதிய மேன் மையான குழந்தைகள் வளர்ப்பு கையேட்டை கடலூர் மாவட்ட அனைத்து அரசு மருத் துவ மனைகளிலும் கர்ப்பிணி பெண்களுக்கு வழங்குவ தற்காக ஒரு லட்சம் பிரதிகளை நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் அச்சடித்து கொடுத்தது.
கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் தலைமை வகிக்க, வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் மேன்மையான குழந்தை வளர்ப்பு கையேட் டினை வெளியிட,நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன தலைவர் பிரசன்ன குமார் மோட்டுப்பள்ளி பெற்றுக் கொண்டார்.
கடலூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் ரமேஷ் பாபு,என்.எல்.சி. மனித வள மேம்பாட்டு இயக்குநர் சமீர் சுவரூப் முன்னிலை வகித்தனர்.கையேட்டில், குழந்தைகளின் வளர்ச்சியை தாய்மார்கள் தாமாகவே கண்டறியும் விதமாக தடுப்பூசி மற்றும் வளர்ச்சி பருவ அட்டவணை கொடுக்கப்பட்டுள்ளது.
அதை முறையாக பயன் படுத்தினால் ஆட்டிசம், கற்றலின் குறைபாடு, டிஸ்லெக்ஸியா போன்ற குறைகளை ஆரம்ப நிலை யிலேயே கண்டறிந்து, அதை குணப்படுத்த இயலும். பண்புள்ள குழந்தைக ளாக வளர்ப்பது எப்படி என்பதற்கான குறிப்புகளும் இதில் இடம் பெற்றுள்ளது.
தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை அறிவுள்ள, பண்புள்ள குழந்தைகளாக வளர்க்க இக்கை யேட்டினை பயன்படுத்திக் கொள்ளும்படி சிதம்பரம் குழந்தைகள் நல மருத்துவர் வி. சிவப்பிரகாசம் கேட்டுக் கொண்டுள்ளார்.



