fbpx
Homeபிற செய்திகள்‘தன்னம்பிக்கை, மன உறுதியுடன் செயல்பட வேண்டும்’ அவினாசிலிங்கம் மாணவிகளுக்கு அறிவுரை

‘தன்னம்பிக்கை, மன உறுதியுடன் செயல்பட வேண்டும்’ அவினாசிலிங்கம் மாணவிகளுக்கு அறிவுரை

அவினாசிலிங்கம் மனை யியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தில் நன்றி நவிலும் விழா, பொறுப்பு ஒப்படைப்பு விழா நேற்று (மே 11) நடந்தது.
மாணவர் பேரவையின் வெளியேறும் உறுப்பினர்கள் தங்களது பொறுப்புகளை புதிய மாணவர் பேரவை உறுப் பினர்களிடம் ஒப்படைத்தனர்.

தேசிய மாணவர் படை (என்சிசி) மாணவர்கள் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட (என்.எஸ்.எஸ்.) மாணவர்களும் தங்களது பொறுப்புகளை இக்கல்வி ஆண்டில் பயிலும் புதிய மாணவர்களிடம் ஒப் படைத்தனர்.வணிக மேலாண்மைத் துறைப் பேராசிரியர் முனைவர் விஜயா வரவேற்றார்.

துணைவேந்தர் முனைவர் பாரதி ஹரிசங்கர் 2022-&23 ம் ஆண்டில் நடைபெற்ற நிகழ்வுகள், சாதனைகள் குறித்து அறிக்கை வாசித்தார். தமிழக அரசால் தொடங்கப்பட்ட புதுமைப்பெண் திட்டம், பல்வேறு தொழில் சார்ந்த முகாம்களில் நேர்முகத் தேர்வில் 952-க்கும் மேற்பட்ட மாணவிகள் வேலைவாய்ப்பு பெற்றது அவர் குறிப்பிட்டார்.

வேந்தர் ச.ப.தியாகராஜன் தலைமை தாங்கி பேசும்போது, பல்வேறு சாதனைகள் புரிந்து முதலிடம் பெற்ற மாணவிகளை பாராட்டினார்.
விஷன் 2040 கல்வியின் எதிர்காலத்திற்கு வழி வகுக்கும் உயர் கல்வியின் முக்கியத்துவம் குறித்தும் பேசினார்.

சிறப்பு விருந்தினர்

சிறப்பு விருந்தினர் நிர்வாக அறங்காவலர் தி.ச.க.மீனாட்சி சுந்தரம் பேசும்போது,
கல் வியோடு கலாச்சாரத்தை கற்றுத்தருகின்றது இக்கல்வி நிறுவனம். நாளைய சமுதாயத்தை உருவாக்குகின்ற மாணவர்கள் புதிய உத்வேகத்துடன் செயல்பட வேண்டும்.

மாணவியர் தன்னம்பிக் கையுடனும், மன உறுதியுடனும் செயல்பட வேண்டும்.
அனைத்துத் துறை களிலும் சாதனை புரிந்து வெற்றி பெற வேண்டும் என்று குறிப்பிட்டார்.

பல்வேறு துறை சார்ந்த இளங்கலை மற்றும் முதுகலைப் பயிலும் மாணவிகள், தொழில்நுட்பக் கல்வி, ஆசிரியர் பயிற்சிக் கல்வி, உடற்பயிற்சிக் கல்வித் துறையிலும் முதல் மூன்று இடங்களைப் பெற்ற 275-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு பரிசு வழங் கப்பட்டது. முதலிடம் பெற்ற 28 மாணவிகளுக்கு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர். தாவரவியல் துறைப் பேராசிரியர் முனைவர் நிஷா நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img