கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் (முன்னாள் எம்எல்ஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க, கழக இளைஞரணி செயலாளரும் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி வழிகாட்டுதலில், நேற்று (9ம் தேதி) மாலை 6.30 மணியளவில் கண்ணப்ப நகர் சங்கனூர், கோவை மாநகர் மாவட்டம் வடக்கு சட்டமன்றத் தொகுதி சாயிபாபாகாலனி பகுதி திமுக சார்பில் இரண்டாண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
சாயிபாபா காலனி பகுதிச் செயலாளர் கே.எம்.ரவி தலைமை தாங்கினார். சாயிபாபா காலனி பகுதி 32 வது வட்ட செயலாளர் ரா.பார்த்திபன் வரவேற்றுப் பேசினார்.
இதில் கோவை மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் (முன்னாள் எம்எல்ஏ), மாநில விவசாய அணி இணை செயலாளர் தர்மலிங்கம் (முன்னாள் எம்.எல்.ஏ.) ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
இந்தப் பொது கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் எஸ்.கே.ஆனந்தகுமார்,சரஸ்வதி புஷ்பராஜ் மாவட்ட துணைச் செயலாளர் கல்பனா செந்தில், மேற்கு மண்டலத் தலைவர் தெய்வானை தமிழ்மறை, வட்டச் செயலாளர்கள் சுப்புராஜ், குட்டி(எ)ஜெயச்சந்திரன், கண்ணன், மாமன்ற உறுப்பினர்கள் பேபிசுதாரவி, பிரவீன்ராஜ், ஆர்.வைரமுருகன், பகுதிக் கழக நிர்வாகிகள் ஐ.சுக்ருல்லா பாபு, ஆர்.ரங்கசாமி, பழனிச்சாமி, கே.ஜெயக்குமார், என்.தனபால், குருசாமி, முபராக், சங்கனூர் ரங்கசாமி, கே.சண்முகம் மற்றும் நிர்வாகிகள், செயல் வீரர்கள், தொண்டர்கள் பெருந்திரளாகப் பங்கேற்றனர்.



