உங்கள் சாதனங்கள் மெதுவான செயல்திறன் காரணமாக, உங்கள் உற்பத்தித் திறன் தடைபடுகிறதா? உங்களின் தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப உங்கள் பழைய சிஸ்டத்தை மேம்படுத்த விரும்பினால், வெஸ்டர்ன் டிஜிட்டலின் WD Green TM SN350 NVMe™ SSD உங்களுக்கான சரியான ஸ்டோரேஜ் தீர்வாக இருக்கும்.
மெலிதான M..2 2280 படிவக் காரணியானது NVMe ஸ்லாட்டைக் கொண்ட எந்த கணினியையும் விரைவாகவும் எளிதாகவும் மேம்படுத்த உதவுகிறது. இது 5 திறன் வகைகளுடன் வருகிறது:
240GB, 480GB, 960GB, 1TB மற்றும் 2TB. இவை, அனைத்தும் 3 ஆண்டு உத்தரவாதம் கொண்டுள்ளது. இதன் விலை 240ஜிபிக்கு 1,839 ரூபாயில் இருந்து தொடங்கி 22TBக்கு ரூ.12,069 வரை செல்கிறது.
WD Green SN350 SSD350 டிரைவ்கள் ஒரு இலவச, தரவிறக்கம் செய்யக்கூடிய மென்பொருளுடன் வருகின்றன. இது தற்போதைய செயல்திறன், இடம் கிடைக்கும் தன்மை, வெப்பநிலை மற்றும் பலவற்றைக் கண்காணிக்கும்.
பட்ஜெட்டுக்கு ஏற்ற, WD க்ரீன் SN350 NVMe SSD ஆனது 200MB/s* சிறந்த செயல்திறனை வழங்குகிறது மற்றும் 3,200MB/s* வேகத்தில் செயலாற்றும். இது அல்ட்ரா-லோ பவர்-டிராவை வழங்குகிறது,
எனவே உங்கள் லேப்டாப் நீண்ட நேரம் இயங்கும். WD க்ரீன் SN350 NVMe SSD ஆனது இன்ஸ்டால் செய்வது மிகவும் எளிதானது மற்றும் அதிகரித்து வரும் தினசரி தேவைகளுக்கு உங்கள் பழைய கணினியை புதுப்பிக்க முடியும் என்று வெஸ்டர்ன் டிஜிட்டல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



