fbpx
Homeபிற செய்திகள்புகழூர் காவிரி கதவணை கட்டுமான பணியில்பொக்லைன் இயந்திரம் கவிழ்ந்து டிரைவர் பலி

புகழூர் காவிரி கதவணை கட்டுமான பணியில்பொக்லைன் இயந்திரம் கவிழ்ந்து டிரைவர் பலி

கரூர் மாவட்டம், புகழூர் காவிரி ஆற்றில் கதவணை கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த பொக்லைன் இயந்திரம் கவிழ்ந்து அதன் டிரைவர் உயிரிழந்தார்.

கரூர் மாவட்டம் புகழூர் – நாமக்கல் மாவட்டம் அனிச்சம்பாளையம் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டும் பணி கடந்த 2020ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. இப்பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடு பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஆற்றில் மணல்களை அள்ளும் பணியில் ஈடுபட்டிருந்த பொக்லைன் இயந்திரம் ஒன்று திடீரென கட்டுப் பாட்டை இழந்து நீருக்குள் விழுந்தது.

இதை கண்ட மற்ற தொழிலாளர்கள் வேறொரு பொக்லைன் இயந்திரம் மூலம் நீருக்குள் மூழ்கிய பொக்லைன் இயந்திரத்தை வெளியே எடுத்தனர். இந்த சம்ப வத்தில் நீருக்குள் மூழ்கிய பொக்லைன் டிரைவர், பரமத்தி வேலூர் அருகே பொத்தனூரை சேர்ந்த ராஜேஷ் (வயது 36) உயிரிழந்து கிடந்தார்.

பின்னர் இச்சம்பவம் குறித்து அவர்களது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், வேலாயுதம் பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

படிக்க வேண்டும்

spot_img