fbpx
Homeபிற செய்திகள்உருளைக்கிழங்கு கூட்டுறவு சங்கத்தில் அரசு செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு

உருளைக்கிழங்கு கூட்டுறவு சங்கத்தில் அரசு செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு

கோவை மாவட்டம் மேட்டுப் பாளையத்தில் செயல்பட்டு வரும் நீலகிரி உருளைக்கிழங்கு கூட்டுறவு சங்கத்தில் நேற்று கூடுதல் தலைமை செயலாளரும் அத்துறையின் செயலா ளருமான ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்

என்.சி.எம்.எஸ் என்ற இந்த கூட்டுறவு சங்கத்தின் மூலம் நீலகிரி மாவட்ட விவசாயிகளிடம் நேரடியாக உருளைக்கிழங்குகள் கொள்முதல் செய்யப்பட்டு இங்கு தரம் பிரிக்கபட்டு விற்பனைக்கு அனுப்பப்பட்டு வரும் நிலையில் அப்பணிகளை அவர் ஆய்வு செய்தார்

முறையாக தரம் பிரிக்கப்படுகிறதா கூட்டுறவு விதிமுறைகள் முறைப்படி பின்பற்றப்படுகிறதா என ராதா கிருஷ்ணன் நேரில் ஆய்வு மேற் கொண்டதுடன் அங்கு பணியில் உள்ள ஊழியர்களின் குறைகளை கேட்டறிந்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூடுதல் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது: உலக அளவில் சிறுதானிய ஆண்டு என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அது குறித்து விழிப்புணர்வு தற்போது மக்கள் மத்தியில் ஏற் பட்டு வரும் நிலையில் அதனை தமிழகத்தில் அரசே அளிக்க ஏற்பாடு செய்துள்ளது.

அதன் ஒரு பகுதியாக நீலகிரி, தர்மபுரி மாவட்டத்தில் மே 3 (இன்று) முதல் கேழ்வரகு இலவ சமாக வினியோகம் செய்ய உள்ளது. அதன் பின்னர் அது குறித்து வேளாண் பஜ்ஜெட்டில் அறிவித்தவாறு விவசாயிகளின் உதவியுடன் கேழ்வரகு உற்பத்தியை பெருக்கி அதற்கு பின்னர் தமிழகம் முழுவதும் அனைத்து நியாயவிலை கடைகளில் வினியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் கம்பு உள்ளிட்ட சிறுதானிய தேவைகளை உணர்ந்து அதற்கு தற்போது வரவேற்பு அதிகரித்து வருவதால் அதன் உற்பத் தியையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது.

கடன் வசதிகள்

மேலும் கூட்டுறவு சங்கத்தின் மூலம் புதிய வேளாண் கடன்கள் 14,000 கோடியாக உயர்த்தபட்டுள் ளது. அத்துடன் பொதுமக்களும் இந்த சங்கத்தின் மூலம் பயன டையும் வகையில் உறுப்பினர்களுக்கு வீட்டுமனை கடன் உள்ளிட்ட 17 கடன் வசதிகள் ஏற்பாடு செய்யபட்டுள்ளது.

நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கத்தை ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்த நடவ டிக்கை எடுக்கப்படும். இந்த ஆய் வின் போது நீலகிரி கூட்டுறவு இணை பதிவாளர் வாஞ்சிநாதன், கோவை கூட்டுறவு இணை பதிவாளர் பார்த்திபன், கூட்டுறவு சங்க மேலாளர் மகாலட்சுமி,உதவி மேலாளர் குமார்,நீலகிரி மாவட்ட துணை பதிவாளர் தமிழ்ச்செல்வன், செயலாளர் தியாகு மற்றும் சங்க பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img