சாஃப்ட்வேர் தயாரிப்புத் துறையில் முன்னோ டியாகத் திகழும் டேலி சொல்யூஷன்ஸ், மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கான(SMBs) வணிக மேலாண்மை தீர்வுகளை வழங்கி வரும் ‘‘MSME ஹானர்ஸ்’ ன் மூன்றாவது பதிப்பை அறிவித்தது.
250 கோடி ரூபாய்க்கும் குறைவான விற்றுமுதல் மற்றும் செல்லுபடியாகும் GSTIN உள்ள அனைத்து வணிகங்களும் இந்த மதிப்புமிக்க அங்கீகாரத்தில் பங்கேற்க முடியும்.
ஆர்வமுள்ள தொழில்முனைவோர் அல்லது அத்தகைய தொழில்முனைவோரை அறிந்தவர்கள் தங்கள் உள்ளீடுகளை லீttஜீs://tணீறீறீஹ்sஷீறீutவீஷீஸீs.நீஷீனீ/னீsனீமீ-லீஷீஸீஷீuக்ஷீs மூலம் மே 10 தேதிக்குள் சமர்ப்பிக்கலாம்.
பங்களிப்புகள் மற்றும் சாதனை வரலாறுகளின் பன்முகத்தன்மையை உண்மையாக முன்னிலைப்படுத்துவதற்காக, MSME ஹானர்ஸ் கீழ்க்கண்ட 5 பிரிவுகளில் கௌரவிக்கப்படும்:
வொண்டர் வுமன்: தங்கள் லட்சியங்களைத் தொடரும் மற்றும் இன்றைய வணிகங்களை மறுவரையறை செய்துள்ள பெண் தொழில்முனை வோரை அங்கீகரித்தல்
பிசினஸ் மேஸ்ட்ரோ: காலத்தின் சோதனையைத் தாங்கி, தொடர்ந்து வளர்ந்து வரும் சாதனையாளர்களை அங்கீகரித்தல்.
நியூஜென் ஐகான்: சந்தை தேவையைக் கண்டறிந்து புதுமையான தீர்வுகளை அறிமுகப்படுத்திய தொடக்க நிறுவனங்களை அங்கீகரித்தல்.
டெக் டிரான்ஸ்ஃபார்மர்: மேம்பட்ட விளைவுகளுக்காக அதிநவீனதொழில்நுட்பத்தை விரைவாக மாற்றியமைக்கும் நிறுவனங்களை அங்கீகரித் தல்.
சாம்பியன் ஆஃப் காஸ்: உலகளாவிய நல்வாழ்வுக்க £ன சிறந்த நோக்கத்திற்காக பங்களித்த வணிகங்களை அங்கீகரித்தல்.
புதுமை மற்றும் வளர்ச்சி
டேலி சொலுஷன்ஸ் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி ஜெயதி சிங் கூறியதாவது:குறு, சிறு நடுத்தர வணிகங்கள், உலகப் பொருளாதாரத்திற்கு அவர்களின் பங்களிப்புகளுக்காக மட்டும் கொண்டாடப்பட வேண்டியவையல்ல. ஆனால் புதுமை மற்றும் வளர்ச்சியின் சில சாதனைகளுக்காகவும் கூட கொண்டாடப்படவேண்டியவையாகும்.
MSME ஹானர்ஸ் இன் இந்த 3 வது பதிப்பு, அளவு, பிராந்தியம், வணிக வகைகள் மற்றும் காலம் ஆகியவற்றின் பன்முகத்தன்மையில் இந்தத் தொழில்முனைவோரின் சாதனை வரலாறுகளை அங்கீகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றார்.



