கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் துடியலூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாநகராட்சி பொதுநிதியிலிருந்து ரூ.6.50 லட்சம் மதிப்பீட்டில் பழுது மற்றும் பராமரிப்பு பணிக்கு மேயர் கல்பனா ஆனந்தகுமார், பூமிபூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார்.
உடன் வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல், பணிக்குழு தலைவர் சாந்திமுருகன், மாமன்ற உறுப்பினர்கள் புஷ்பமணி, சித்ரா தங்கவேல், உதவி ஆணையர் மோகனசுந்தரி, உதவி செயற்பொறியாளர் செந்தில்பாஸ்கர், உதவி நகரமைப்பு அலுவலர் விமலா, மண்டல சுகாதார அலுவலர் ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர் ஜெயின்ராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.



