fbpx
Homeபிற செய்திகள்கோவை அம்பாள் ஆட்டோ ஷோரூமில் மாருதி சுசூகியின் பராங்க்ஸ் கார் அறிமுகம்

கோவை அம்பாள் ஆட்டோ ஷோரூமில் மாருதி சுசூகியின் பராங்க்ஸ் கார் அறிமுகம்

அவிநாசி சாலையில் உள்ள அம்பாள் ஆட்டோ – மாருதி சுசூகி நெக்சா ஷோரூமில் மாருதி சுசூகி நிறுவனத்தின் புதிய மாடல் காரான ஃபராங்க்ஸ் அறிமுகம் செய்யப்பட்டது.

சிறப்பு விருந்தினர் விஜய் டி.வி.யின் ‘கலக்கப்போவது யாரு’ நகைச்சுவை கலைஞர் குரேஷி ஃபராங்க்ஸ் காரை அறிமுகப்படுத்தினார். அம்பாள் ஆட்டோ நிறுவ னத்தின் இணை நிர்வாக இயக்குநர் அனீஷ் முத்துசாமி, கிளை தலைவர் ராதாகிருஷ்ணன், ஷோரூம் மேலாளர் சிலம்பரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மாருதி சுசூகியின் புதிய ஃபராங்க்ஸ் கார், காம்பாக்ட் எஸ்.யு.வி. வகையை சேர்ந்தது. 5 இருக்கைகள் கொண்ட இந்த காரில் பாதுகாப்புக்காக 6 ஏர் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.

என்ஜின்

காரின் ஆடியோ சிஸ்டம் சாப்ட்வேர் துறையில் முன் னணி வகிக்கும் ஆர்கமிஸ் நிறுவனத்தின் உதவியுடன் மேம் படுத்தப்பட்டுள்ளது. வழக்கமான 1.2 லிட்டர் திறன் கொண்ட என்ஜின் வகையும் உண்டு, அதிநவீன 1 லிட்டர் டர்போ சார்ஜ் வகையிலும் வருகிறது.

லிட்டருக்கு 20 கி.மி.மயிலேஜ் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மேன்யூவல் மற்றும் ஆட்டோமாடிக் டிரான்ஸ்மிஸன் ஆகிய இரு வகைகளிலும் கார் வெளிவந்துள்ளது. கருப்பு, சிவப்பு, வெள்ளை, சில்வர், பிரவுன், கிரே என 6 நிறங்களில் இந்த கார் விற்பனைக்கு வந்துள்ளது.

படிக்க வேண்டும்

spot_img