fbpx
Homeபிற செய்திகள்கோவையில் முதன்முறையாக 72 கேமராக்களுடன் சிசிடிவி சர்வீஸ்- காவல் ஆணையர் துவக்கிவைத்தார்

கோவையில் முதன்முறையாக 72 கேமராக்களுடன் சிசிடிவி சர்வீஸ்- காவல் ஆணையர் துவக்கிவைத்தார்

கோவையில் முதன்முறையாக சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் சிசிடிவி சர்வீஸ் 72 கேமராக்களுடன் தொடங்கப்பட்டு உள்ளது. இதனை காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.

விழாவில் ஆணையாளர் பேசுகையில், பாதுகாப்பு பலப்படுத்தவும் மற்றும் குற்ற செயல்களில் ஈடுபடுவோரை உடனடியாக சிசிடிவி கண்காணிப்பு அறை வாயிலாக காவலர்கள் கண்காணித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கு உதவியாக முதல் கட்டமாக சாய்பாபா காலனியில் இந்த சேவை துவங்கப்பட்டுள்ளது .

படிப்படியாக நகரம் முழுவதும் இது விரிவுபடுத்தப்படும் என்று கூறினார்.
பாதுகாப்பு சேவைகளில் விழிப்புணர்வை உருவாக்கி வரும் அரிமா முத்து ஆர்.பழனிசாமியைப் பாராட்டி கோவை வடக்கு காவல் துறை துணை ஆணையாளர் சந்திப் பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்தார்.

முத்து பயர் இன்ஜினியரிங் நிர்வாக இயக்குனர் ரோட்டேரியன் ஆர்.பி.ஜெயபாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img