தமிழ் புத்தாண்டை யொட்டி, அறுசுவை உணவு வகைகளுடன் விருந்து படைக்க இருப்பதாக ஷெரடான் கிராண்ட் சென்னை ரிசார்ட் அண்ட் ஸ்பா எக்சிகியூட்டிவ் செஃப் தேவகுமார் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது: இனிப்பு, புளிப்பு, கசப்பு, உவர்ப்பு, கார்ப்பு, துவர்ப்பு என ஆறு சுவை அடங்கிய சிறப்பு விருந்துடன் தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட இருக்கிறது.
சமையல் குழு
சுவையான பாரம்பரியமான வீட்டுச் சமையல் உணவுகளை குடும் பத்தினர், நண்பர்களுடன் வாடிக்கையாளர்கள் கொண்டாடலாம். இத்துடன் தேங்காய் போளி, வாழைப்பழ பணியாரம், கசகசா பாயாசம் என தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில்
புகழ்பெற்ற உணவுகளை எங்களது சமையல் குழு அன்புடனும், பாசத்துடனும் தயாரித்து வழங்க இருக்கிறது.
இந்த புத்தாண்டை மகிழ்வுடன் கொண்டாடி மறக்க முடியாத நாளாக மாற்றிக் கொள்ளுங்கள் என்றார் தேவகுமார். ஒரு நபருக்கு கட்டணமாக ரூ.2499 மற்றும் வரிகள், நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



