fbpx
Homeபிற செய்திகள்மு.க.ஸ்டாலின் புகைப்பட கண்காட்சியை பார்த்த நாட்டுப்புற கலைஞர் வேல்முருகன் பேட்டி- கிராமிய கலைகளை தமிழ்நாடு அரசு...

மு.க.ஸ்டாலின் புகைப்பட கண்காட்சியை பார்த்த நாட்டுப்புற கலைஞர் வேல்முருகன் பேட்டி- கிராமிய கலைகளை தமிழ்நாடு அரசு ஊக்குவித்து வருகிறது

கோவை வ உ சி மைதானத்தில் “எங்கள் முதல்வர் – எங்கள் பெருமை” வரலாற்று சிறப்பு மிக்க புகைப்பட கண்காட்சியை தமிழக மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி முன்னிலையில், நடிகர் சத்தியராஜ் கடந்த 7 ந்தேதி துவக்கி வைத்தார்.

அன்று முதல், தினமும் புகைப்பட கண்காட்சியை காண ஏராளமான பொதுமக்கள் வந்து பார்த்து செல்கின்றனர். மேலும், மாலையில் தினமும் ஒவ்வொரு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில், நேற்று நாட்டுப்புற கலைஞர் வேல்முருகன் இந்த வரலாற்று சிறப்புமிக்க கண்காட்சியை பார்வையிட்டு வியந்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:

“எங்கள் முதல்வர் எங்கள் பெருமை”

“எங்கள் முதல்வர் எங்கள் பெருமை” , தமிழகம் மட்டுமல்ல, உலகம் முழுவதும் வாழும் அத்தனை தமிழ்களுக்கும் பெருமை சேர்க்கும் விதத்தில் அமைந் துள்ளது. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, நம்முடைய தமிழக முதல்வர் தளபதி அவர்கள் ஆளும் ஆட்சியில் மிகப்பெரிய வரலாறுகள், இருந்த காலகட்டத்தில் இருந்து, ஒவ்வொரு விஷயமும் மிகப்பெரிய வரலாறாக இருந்து வருகின்றது.

இன்றைக்கு தமிழக முதல்வராக இருந்தாலும் தன்னை, சாதாரண மனிதனாக ஆக்கி மக்களுக்கு எப்போதும் தொண்டனாக இருக்க வேண்டும், மக்களுடைய தொண்டனாக, இருக்க வேண்டும் என்பதுதான் அவருடைய நோக்கமாக இருக்கிறது.

மக்கள் எப்பொழுதும் தமிழக முதல்வராக இவர்தான் இருக்க வேண்டும் என எண்ணு கின்றனர். அவருடைய ஆட்சி, ரொம்ப ரொம்ப வெற்றிவாகை சூடிக் கொண்டிருக்கிறது.

எனக்கு மிகப்பெரிய சந்தோஷம் என்ன வென்றால், தலை வர் கலைஞரின் பாடல், கடைசி பாடலை பேசவும், மாநாட்டில் அவர் எழுதிய பாடலை வேல் முருகன் பாட வேண்டும் என்று எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தார்.

அந்த மேடை யில், 23 நாட்டு தலைவர்கள் இருந்த மேடையில் எனக்கு வாய்ப்பு கொடுத்து தலைவர் பாட வைத்தார். உள்ளபடியே மிகப்பெரிய சந்தோசம்.

ஒவ்வொரு காலகட்டங்களிலும் தளபதி பிறந்தநாள் ஆக இருந்தாலும் சரி, கட்சி பல்வேறு நிகழ்ச்சிகளாக இருந்தாலும், கட்சி பாடல்களாக இருந்தாலும் சரி, சமுதாய பாடல்கள் மற்ற பொதுநல பாடல்கள் பாடுவதற்கு ஒவ்வொரு முறையும் முதல்வர் வாய்ப்பு கொடுத்து மக்கள் கலைஞர்களையும் கிராமிய கலைஞர்களையும் ஊக்குவித்து வருகிறார் அதுதான் சென்னை சங்கமம்.

மிகப்பெரிய வரலாறு கிடைத்தது ஒவ்வொரு நிகழ்வு களையும் வாய்ப்பு கொடுத்து வருகிறார். இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்வில், திமுக மாவட்ட செயலாளர்கள் தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன், மேயர் கல்பனா ஆனந்தகுமார், மண்டல தலைவர் கள் மீனாலோகு, தனலட்சுமி, நிலைக்குழு தலைவர்கள், ஏர்போர்ட் ராஜேந்திரன், பொறியாளர் அணி பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img