fbpx
Homeபிற செய்திகள்பார்கின்சன் நோய்க்கான தீர்வுக்கு வாய்ப்பு: பி வெல் மருத்துவமனை நடத்திய மாநாட்டில் தகவல்

பார்கின்சன் நோய்க்கான தீர்வுக்கு வாய்ப்பு: பி வெல் மருத்துவமனை நடத்திய மாநாட்டில் தகவல்

ஜப்பானில் தயாரித்த பீட்டா- 1,3-1,6 குளுக்கான் (Nichi BRITE) உணவுப்பொருளை 90 நாட்கள் உட்கொண்ட பிறகு, யூனிஃபைட் பார்கின்சன் நோய் மதிப்பீட்டு அளவில் (UPDRS) முன்னேற்றமும் மலச்சிக்கலுக்கு தீர்வும் கிடைத்தது என சென்னை பி வெல் மருத்துவமனை நடத்திய உலக பார்கின்சன் தின அறிவியல் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் நடைபெற்ற ASENT 2023 (American Society for Experimental Neurotherapeutics) ஆண்டுக் கூட்டத்தில், இந்த முடிவுகள் பகிரப்பட்டு உலகளா விய கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

மருத்துவ ஆராய்ச்சி

தீங்கு விளைவிக்கும் குடல் நுண்ணுயிரிகளை முழுமையாகக் கட்டுப்படுத்துவதன் மூலம் ஆட்டிசம் பாதிக்கட்ட குழந்தை களின் குடலில் அசாதாரண ஆல்பா சைனுக்களின் புரதங்களின் திரட்டை பீட்டா குளுக்கான் குறைக்க முடியும் என்ற முந்தைய மருத்துவ ஆராய்ச்சியின் கண்டுபிடிப்பும் அப்படி குடலில் திரளும் புரதங்கள் மூளைக்கு சென்று பார்கின்சன் உள்ளிட்ட நோய்களை ஏற்படுத்தும் என்ற கணிப்பும் இந்த மருத்துவ ஆராய்ச்சிக்கு வித்திட்டுள்ளது.

பார்கின்சன் என்பது ஒரு மூளை சிதைவு நோய். சுமார் பத்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்தியாவிலும் அமெரிக்காவிலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அமிலாய்டு புரதங்களை உற்பத்தி செய்யும் தீங்கு விளைவிக்கும் என்டோரோபாக்டீரியா எனும் குடல் நுண்ணுயிரியின் அதிகரிப் பால் குடலில் அசாதாரணமான ஆல்பா-சினுக்ளின் அதிகரித்து இந்த அசாதாரண புரதங்கள் குடல்-மூளை-அச்சு மூலம் மூளைக்கு பரவுகிறது. இதனால் லூயி திரட்டுக்கள் மூளையில் குவிந்து, டோபமைன் சுரக்கும் செல்களை சேதப்படுத்தி பார்கின்சன் நோய்க்கு வழிவகுக்கிறது.

AFO–202 வகை Aureobasidium Pullulans உற்பத்தி செய்யும் Nichi-BRITEபீட்டா குளுக்கான், நன்மை பயக்கும் நுண்ணுயிரிகளை அதிகரிக்கும் அதே வேளையில், தீங்கு விளைவிக்கும் குடல் பாக்டீரியாக்களை கட்டுப்படுத்தியது முந்தைய ஆய்வில் தெரியவந்தது. பார்கின்சன் நோயில் இந்த மருத்துவ ஆராய்ச் சியை மேற்கொள்ள வழிவகுத்தது என்று ஆராய்ச்சி குழுவின் உறுப்பினரான டாக்டர் டெதீபியா தெரிவித்தார்.

இந்த ஆய்வில் Nichi-BRITE பீட்டா குளுக்கான் பாதுகாப்பு நிரூபிக்கப்பட்டுள்ளதால், மிகத்துல்லிய MRI மதிப்பீடு, குடல் நுண்ணுயிர் மதிப்பீடு மற்றும் மூளையின் அளவீட்டு பகுப்பாய்வு போன்ற கணிப்புகளை உள்ளடக்கிய பெரிய ஆய்வுகளை நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.

இத்தகைய ஆய்வுகள் ஆல்பா சைனுக்ளின் புரதங்களின் திரிபால் ஏற்படும் பார்கின்சன் மற்றும் Multiple System Atrophy போன்ற synucleinopathies நோய்களுக்கு தீர்வுகிடைக்க உதவும் என்று அவர் மேலும் கூறினார்.

நரம்பியல் நிபுணரான டாக்டர் அல்லிமுத்து நித்யா னந்தம் கூறுகையில், ஒரு நோயாளியின் காந்த அதிர்வு பார்கின்சன் இன்டெக்ஸ் (MRPI) மற்றும் ஒட்டுமொத்த UPDRS முன்னேற்றம், மலச்சிக்கலின் தீவிரத்தன்மை குறைவு, அனைத்து நோயாளிகளிடமும் காணப்பட்ட கிரியேட்டினின் கைனேஸ் (Creatinine Kinase) கட்டுப்பாடு மிகவும் ஊக்கமளிக்கிறது என்றார்.

அமெரிக்காவின் டெக்ஸாஸ் ஹூஸ்டன் மெதடிஸ்ட் பல்கலைக்க ழத்தை சேர்ந்த உலகின் முன்னோடி ஆராய்ச்சியாளரான பேராசிரியர் முரளிதர் ஹெக்டே, ஆல்பா-சினுக்ளின் தொடர்பான அசாதாரணங்கள், லெவி புரத்திரட்டு ஆகியவை மூளைச் சிதைவுக்கும், பார்கின்சன் நோய், லூயி பாடி டிமென்ஷியா (Dementia) மற்றும் அல்சைமர் (Alzheimer’s Disease) நோய்க்கு வழிவகுக்கிறது என்று விளக்கினார்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த டாக்டர் ருக்மணி மிருதுளா, இந்தியாவில் இளம் வயதிலேயே பார்கின்சன் நோய் அதிகரித்து வருவதைப் பற்றி தெரிவித்தார். Nichi BRITE பீட்டா குளுக்கன் உட்கொண்டதைத் தொடர்ந்து 104 வயது நோயாளிக்கு நடுக்கம் காணாமல் போனதாக இத்தாலி யைச் சேர்ந்த பேராசிரியர் Ezio Gagliardi இன் விளக்கக்காட்சி அனைவர் கவனத்தையும் ஈர்த்தது.

இதுபோன்ற மூளைச்சிதைவு நோய்களில் ஆரம்பகால நோயறிதல் மற்றும் தலையீடு மிகவும் முக்கியமானது என்றும், பார்கின்சன் நோயின் அறிகுறிகளுடன் வரும் நோயாளிகளுக்கு தகுதிவாய்ந்த நரம்பியல் நிபுணர்கள் மூலம் பி வெல் மருத்துவமனைகள் சிகிச் சையை வழங்குவதாக நிகழ்வு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் வெற்றிவேல் கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img