உலகின் கலைநயமிக்க பிரைடல் நகைகளின் கண்காட்சி, மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் நிறுவனத்தின் கோவை 100 அடி ரோடு ஷோரூமில் கடந்த 8-ம் தேதி துவங்கியது. வரும் 16-ம் தேதி வரை நடைபெறுகிறது.
துவக்க நாளில் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் இலவசமாக மெஹந்தி யை இந்துமதி குடும்பத்தினர், கணேசன் குடும்பத்தினர், சந்தோஸ் குடும்பத்தினர் துவக்கி வைத்தனர்.
இவர்களுடன் மலபார் கோல்டு டைமண்ட்ஸ், கோவை 100 அடி கிளை தலைவர் நௌசாத், துணை தலைவர் ரனீஷ், வர்த்தக மேலாளர் தேவராஜ், விற்பனை மேலாளர் அஜீத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கண்காட்சியை முன்னிட்டு ஏப்ரல் 15, 16 ஆகிய இரண்டு நாட்க ளுக்கு ஷோரூம் வருகை தரும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் இலவசமாக மெஹந்தி போடப்படுகிறது.
சிறப்பு சலுகை
மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் விற்பனையகத்தில் அணிந்தாலே ஜொலிக்கும் வைரநகைகளான ‘மைன்’, பிரம்மாண்டமான வடிவமைப்புகளை கொண்டுள்ள வெட்டாத வைரத்தால் செய்யப்பட்ட ‘எரா’ , மிகவும் பொக்கிஷமாக கருதப்படும் விலை உயர்ந்த கற்களால் செய்யப்பட்ட நகை தொகுப்பான ‘பிரீசியா’ நகைகள், கைவினை கலைஞர்களால் செய்யப்பட்ட நகைகளின் தொகுப்பான ‘எத்தினிக்’ , கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பாரம்பரிய இந்திய நகை வடிமைப்புகளில் உருவான ‘டிவைன்’ ஆகியவை இடம் பெற்றுள்ளன. இதைத்தவிர அழகிய நகைகளை சிறப்பு சலுகையில் வாங்கவும் வாய்ப்பளிக்கப்படுகிறது.
மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் தற்போது 10 நாடுகளில் 300 -க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களுடன் உலகில் மிகப்பெரிய நகை விற்பனை நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோயில், சேலம், திருச்சி, ஈரோடு, வேலூர், இராமநாதபுரம், தருமபுரி, தஞ்சாவூர், கும்பகோணம், திருப்பூர், ஆகிய நகரங்களில் 21 கிளைகளை கொண்டுள்ளது.



