fbpx
Homeபிற செய்திகள்ஐசிஐசிஐ புருடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ் நீண்ட கால சேமிப்புத் திட்டம் ‘ஐசிஐசிஐ ப்ரூ கோல்ட்’

ஐசிஐசிஐ புருடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ் நீண்ட கால சேமிப்புத் திட்டம் ‘ஐசிஐசிஐ ப்ரூ கோல்ட்’

ஐசிஐசிஐ புருடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ், ஐசிஐசிஐ ப்ரூ கோல்ட் என்ற புதுமையான நீண்ட கால சேமிப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது .உத்தரவாதமான வாழ்நாள் வருமானத்தைப் பெறுவதைத் தவிர, இந்த திட்டத்தில் உள்ள ஆயுள் காப்பு அம்சம் குடும்பத்திற்கு நிதிப் பாதுகாப்பை வழங்குகிறது.

வாடிக்கையாளர்களின் மாறுபட்ட வருமானத் தேவைகளைப் பூர்த்தி செய்ய, இந்தத் திட்டமானது, உடனடி வருமானம், பூஸ்டர் உடனான வருமானம் மற்றும் ஒத்திவைக்கப்பட்ட வருமானம் என மூன்று வகைகளில் கிடைக்கிறது.

இந்த ‘உடனடி வருமானம்‘ மாறுபாட்டைத் தேர்வுசெய்யும் வாடிக்கையாளர்கள், பாலிசி வழங்கிய நாளிலிருந்து 30 நாட்களுக்குப் பிறகு வருமானத்தைப் பெறுவதற்குத் தேர்வுசெய்யலாம்.

உடனடி வருமானம்

இந்த “பூஸ்டருடன் உடனடி வருமானம்“ மாறுபாட்டை வாங்கும் வாடிக்கையாளர்கள், பாலிசி வழங்கிய நாளிலிருந்து 30 நாட்களுக்குப் பிறகு தொடங்கும் வாழ்நாள் வருமானத்துடன், கூடுதலாக, ஒவ்வொரு ஐந்தாவது பாலிசி ஆண்டும் கூடுதல் உத்தரவாத வருமானத்தைப் பெறுவார்கள்.

ஐசிஐசிஐ புருடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தலைமை விநியோக அதிகாரி அமித் பால்டா கூறுகையில், “அதிகரிக்கும் பணவீக்கம் பல நுகர்வோரை, தங்கள் தொழிலில் இருந்து பெறும் வருமானத்தைத் தவிர்த்து கூடுதல் உத்தரவாதமான வருமான ஆதாரத்தை உருவாக்கத் தூண்டுகிறது.

ஐசிஐசிஐ ப்ரூ கோல்ட் திட்டத்தை வடிவமைத்ததன் தோற்றம் இதுவாக இருந்தது. இந்த புதுமையான நீண்ட கால திட்டம் வாடிக்கையாளர்களுக்கு சந்தை ஏற்ற இறக்கங்களிலிருந்து பாதுகாக்கப்பட்ட உத்தரவாதமான வருமான ஆதாரத்தை வழங்குகிறது ’ என்றார்.

படிக்க வேண்டும்

spot_img