Homeபிற செய்திகள்கரூர் மாவட்ட அளவிலான செஸ் போட்டியில் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கரூர் மாவட்ட அளவிலான செஸ் போட்டியில் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கரூர் -சேலம் புறவழிச்சாலை பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளி வளாகத்தில் கரூர் மாவட்ட சதுரங்கக் கழகத்தின் சார்பாக அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கான மாவட்ட அளவிலான சிறுவர், சிறுமியர்களுக்கான மற்றும் பெரியவர்களுக்கான செஸ் போட்டி இன்று நடைபெற்றது.

7,9,11,13, 15, 17, 19, 25 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு நான்கு பிரிவுகளாக நடைபெற்ற செஸ் போட்டியில், மாவட்டம் முழுவதும் இருந்து 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இப்போட்டியானது 40க்கும் மேற்பட்ட செஸ் ஆர்பிட்டர்கள் கண்காணிப்பில் நடத்தப்பட்டது.

ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு கோப்பைகள் மற்றும் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கபட்டது. மேலும், இன்று நடைபெற்ற போட்டியில் முதல் இரண்டு இடத்தைப் பிடிக்கும் மாணவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

படிக்க வேண்டும்

spot_img