fbpx
Homeபிற செய்திகள்‘நரிஷ் யூ’ நிறுவனத்தில் நடிகை சமந்தா முதலீடு

‘நரிஷ் யூ’ நிறுவனத்தில் நடிகை சமந்தா முதலீடு

இந்தியாவில், உள்நாட்டிலேயே விளைவிக்கப்பட்ட குயினோவா, சியா விதைகளை சில்லரை விற்பனைக்கு முதன் முதலாக அறிமுகம் செய்திருக்கும் ‘நரிஷ் யூ’ உள்நாட்டிலேயே கொள்முதல் செய்யப்படுகிற மற்றும் நிலைப்புத்தன்மையுள்ள சூப்பர் ஃபுட்ஸ் தயாரிப்புகளை ஊக்குவிப்பதில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.
பிரபல நடிகை சமந்தாவின் முதலீடு ‘நரிஷ் யூ’ நிறுவனத்தின் சீட் ஃபண்டிங் சுற்றின் ஓர் அங்கமாக பெறப்பட்டிருக்கிறது.

இதற்கு முன்பு டிரையம்ப் குரூப் ஒய். ஜனார்த்தனராவ், டார்வின்பாக்ஸ் இணை நிறுவனர் ரோஹித் சென்னமனேனி, ஜெரோதா இணை நிறுவனர் நிகில் காமத், குருஹாஸ் பிராப்டெக் இணை நிறுவனர் அபிஜீத்பை, கிம்ஸ் ஹாஸ்பிட்டல்ஸ் தலைமை செயல் அலுவலர் அபினவ் பொல்லினேனி ஆகிய பிரபல ஆளுமைகளின் முதலீட்டையும் இந்நிறுவனம் ஈர்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தனது முதலீடு பற்றி நடிகை சமந்தா கூறியதாவது:
நரீஷ் யூ நிறுவனத்தின் தயாரிப்புகளை சில காலமாகவே நான் பயன்படுத்தி வருவதால் இந்த பிராண்டில் செய்யப்பட்டிருக்கும் முதலீடு இயற்கையான வளர்ச்சி செயல்பாடாகவே இருக்கிறது.

குயினோவா, சிவா போன்ற சூப்பர் ஃபுட்ஸ்களை அறிமுகம் செய்த வரலாறு என்னை பெரிதும் ஈர்த்திருக்கிறது. உள்நாட்டிலேயே இவற்றை சாகுபடி செய்வதற்கான அவர்களது முயற்சிகள் மற்றும் சிறுதானியங்கள் அடிப்படையில் தூய்மையான லேபிளுடன் வீகன் சூப்பர் ஃபுட்ஸ் தயாரிப்புகளை பிரபலப்படுத்தும் அவர்களது எதிர்கால செயல் திட்டமும் பிரமிக்கச் செய்திருக்கிறது என்றார்.

‘நரிஷ் யூ’- ன் முதல் தாவர அடிப்படையிலான வீகன் மற்றும் லேக்டோஸ் இல்லாத, பாலுக்கு மாற்றுப் பொருளான மில்லட் மில்க் (Millet Mlk) என்ற தயாரிப்பினையும் சமந்தா அறிமுகம் செய்தார்.

நரீஷ் யூ நிறுவனத்தின் இணை நிறுவனர் கிருஷ்ணா ரெட்டி, இணை நிறுவனர் சௌம்யா ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img